📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 28, 2026 09:04 AM

Dorothy Day 3 Box Office

Dorothy Day 3 Box Office

சென்னை: கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது படமாக உருவாகியிருக்கிறது டோரதி. திருநர்கள் குறித்தும், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்தும் இந்தப் படத்தின் கதை பேசுகிறது. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

தமிழ் சினிமாவில் இப்போதைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ். பீட்சாவில் ஆரம்பித்த அவரது இயக்குநர் பயணம் சூப்பராக போய்க்கொண்டிருக்கிறது. கமர்ஷியலாகவும், க்ளாஸாகவும் படம் எடுப்பதற்கு கார்த்திக் சுப்புராஜ்தான் சரியான ஆள் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. அவரது மேக்கிங்கும் அதை உண்மை என்று பல முறை உணர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் டோரதி படத்தை இயக்கியிருக்கிறார்.

டோரதி கார்த்திக்: இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைத்திருக்கிறார். முதன்முறையாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துக்கு ராஜா இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்று; பட்டித்தொட்டியெங்கும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸான படம்: ராஜாவின் இசையும் படத்தின் மீதான ஹைப் எகிறுவதற்கு காரணமாக இருந்தது. மேலும் ரிலீஸுக்கு முன்னதாக படத்தை பார்த்த தனுஷ், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரும், டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் படம் பார்த்தவர்களும் பாராட்டி தள்ளிவிட்டார்கள். இப்படி எக்கச்சக்க வரவேற்பை ரிலீஸுக்கு முன்னதாகவே பெற்று; சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் ரிலீஸானது படம்.

எப்படி இருந்தது படம்?: ட்ரெய்லர், போஸ்டர்களை எல்லாம் பார்க்கையில்; சிறு வயதிலிருந்து ஒன்றாக வளரும் நண்பர்கள் ஒரு பெண்ணுக்காக சண்டை போடுவார்கள் போல என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் படத்தில் மொத்தமாக வேறு விஷயம்தான் மையமாக இருந்தது. திருநர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போல்டாக பேசியிருந்தார் இயக்குநர். அது பெரும்பாலானோருக்கு சர்ப்ரைஸாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அதை தனது ஸ்டைலில் சூப்பராகவே பேசியிருந்தார்.

வசூல் நிலவரம்: இப்படத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரே அளவு கிளம்பியிருக்கின்றன. இந்நிலையில் அப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி, மூன்றாவது நாளான நேற்று மொத்தம் அந்தப் படம் ஒரு கோடியே 51 லட்சம் ரூபாயை வசூலித்ததாம். மூன்று நாட்களில் மொத்தம் மூன்று கோடியே 66 லட்சம் ரூபாயை அள்ளியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.