📅 Sunday, 02 August 2026 IST | ஆடி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 02, 2026 03:33 PM

DPL தொடரில் மாயங் யாதவ் அபாரம்.. சிதறிய ஸ்டம்ப்கள்.. இந்தியாவுக்கு இனி செம லக்

DPL தொடரில் மாயங் யாதவ் அபாரம்.. சிதறிய ஸ்டம்ப்கள்.. இந்தியாவுக்கு இனி செம லக்

DPL தொடரில் மாயங் யாதவ் அபாரம்.. சிதறிய ஸ்டம்ப்கள்.. இந்தியாவுக்கு இனி செம லக்

டெல்லி: இந்திய வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், டெல்லி பிரீமியர் லீக் தொடரில் ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணிக்காக அறிமுகமான தனது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மயங்க் யாதவ் இந்த சாதனையைப் படைத்தார். ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணிக்காக மயங்க் புதிய பந்தைக் கையில் எடுத்தார். அவர் வீசிய முதல் பந்து ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே ஃபுல் டாஸாகச் சென்றது. அதை சவுத் டெல்லி தொடக்க ஆட்டக்காரர் சனத் சங்வான் கவர் திசையில் அடிக்க முயன்றார். ஆனால், பந்து அவரது பேட்டின் உள்பகுதியில் பட்டு விக்கெட்டைத் தகர்த்தது.

இப்போட்டியில் மயங்க் யாதவ் 3 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். இருப்பினும், இவரது சிறப்பான பந்துவீச்சையும் தாண்டி சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி 166 ரன்கள் என்ற இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சவுத் டெல்லி அணியின் வெற்றியை எளிதாக்கிய அன்மோல் சர்மா 36 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் குவித்து அசத்தினார்.

முன்னதாக, முதலில் பேட் செய்த ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணிக்கு அர்பித் ராணா அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் எடுத்தார். ஆனால், மற்ற வீரர்களிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்காததால் அந்த அணி 19 ஓவர்களுக்குள் 165 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. சவுத் டெல்லி அணியின் பந்துவீச்சாளர் அன்ஷுமன் ஹூடா 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முத்திரை பதித்தார்.

மயங்க் யாதவ் இதற்கு முன்பு கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி அந்தத் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. அத்தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய மயங்க், 14.4 சராசரி மற்றும் 13.2 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்த வீரராகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.