📅 Tuesday, 04 August 2026 IST | ஆடி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 03, 2026 07:33 PM

ஏப்ரல் 14 ரிலீஸா?.. மேடையில் மமிதா பைஜு பண்ண மிஸ்டேக்.. உடனே திருத்திய டிடி.. சூர்யா ரியாக்‌ஷன்!

ஏப்ரல் 14 ரிலீஸா?.. மேடையில் மமிதா பைஜு பண்ண மிஸ்டேக்.. உடனே திருத்திய டிடி.. சூர்யா ரியாக்‌ஷன்!

சென்னை: ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் "நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே" என மமிதா பைஜு பாடியது சோஷியல் மீடியாவில் செம ட்ரோல் ஆன நிலையில், தற்போது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இசை வெளியீட்டு விழாவில் அவர் ரிலீஸ் தேதியையே தவறாக சொன்னது ரசிகர்களை டென்ஷன் ஆக்கியுள்ளது.

மீண்டும் மமிதா பைஜு பல்பு வாங்கிவிட்டார் பாருங்க என அவரது பேச்சை கட் செய்துப் போட்டு வைரலாக்கி போட்டு பொளந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ரிலீஸ் பார்த்து வரும் மமிதா பைஜு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மூலமாக கண்டிப்பாக பிரேமலு, டியூட் வைபை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேற சாய்ஸே கிடையாது: எப்போதுமே ஒரு படத்தை எடுக்கப் போகும் முன் ஒரு கதாபாத்திரத்துக்கு ஒரு சில நடிகைகளை மனதில் வைத்து அவர்களிடம் அப்ரோச் செய்வது வழக்கம். ஆனால், கோவையில் பேசிய நடிகர் சூர்யா இந்த படத்தின் கதை சொல்லும் போதே மமிதா பைஜு மட்டும் தான் ஒரே சாய்ஸ். வேறு யாரையும் யோசித்துக் கூட நாங்க பார்க்கல என்றார். வெங்கி அட்லூரி பேசும் போது, மமிதா செட்டில் இருந்தால் ஒரு சிஸ்டர் வைப் வந்துவிடும். ஒரு குடும்பமாகவே இருப்பார். ஹீரோயின் உடன் வேலை செய்வது போன்ற உணர்வே வராது என்றார்.

ரிலீஸ் தேதியை மாற்றி சொன்ன மமிதா பைஜு: விமான நிலையத்தில் மமிதா பைஜு வந்து இறங்கியதில் இருந்தே ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வந்த நிலையில், மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த மமிதா பைஜு கோவை மக்கள் கூட்டத்தில் மைக் பிடித்து பேச ஆரம்பித்ததும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஏப்ரல் 14 ரிலீஸ் ஆகுது என பதற்றத்தில் சொல்லி விட்டார்.

திருத்திய டிடி நீலகண்டன்: ஜேசன் சஞ்சய் பேட்டியை தொடர்ந்து சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இசை வெளியீட்டு விழாவையும் டிடி நீலகண்டன் தொகுத்து வழங்கிய நிலையில், உடனடியாக ஆகஸ்ட் 14 என மமிதா பைஜு மாற்றி சொன்னதும் டிடி திருத்தி விட்டார். அய்யோ ஸாரி பதட்டத்துல மாத்தி சொல்லிட்டேன் என மமிதா பைஜு மேடையிலே மன்னிப்புக் கேட்டு ஆகஸ்ட் 14ம் தேதி தியேட்டருக்கு வந்து பாருங்க என்று பேசி முடித்தார்.

சூர்யா ரியாக்‌ஷன்: மமிதா பைஜு ரிலீஸ் தேதியை மாற்றி சொன்னதுமே கீழே இருந்து சூர்யா கொடுத்த ரியாக்‌ஷனும் அவர் என்ன சொன்னாரு என லிப் சிங்க்கை வைத்து ஏகப்பட்ட ட்ரோல்களையும் நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர். பதட்டத்துல தான் மமிதா பைஜு மாற்றி சொல்லிவிட்டார். அதெல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது. சூர்யா ரசிகர்களுக்கு ஆகஸ்ட் 14 ரிலீஸ் என யாருமே சொல்ல வேண்டாம். அவங்க எப்போதோ படத்தை பார்க்க வெறித்தனமாக ரெடியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.