📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 29, 2026 06:33 AM

ஏழை மாணவர்களுக்கு தனுஷ் கல்வி உதவித் தொகை

ஏழை மாணவர்களுக்கு தனுஷ் கல்வி உதவித் தொகை

ஏழை மாணவர்களுக்கு தனுஷ் கல்வி உதவித் தொகை

சென்னை: ஏழை மாணவ, மாணவிகள் 150 பேருக்கு தனுஷ் கல்வி உதவித் தொகை வழங்கினார். தனுஷுக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசும்போது, ‘‘இங்கு எனது ரசிகர்கள் ரத்ததானம் செய்துள்ளனர். நல உதவிகளும் வழங்குகிறார்கள். அத்துடன் நின்றுவிடக்கூடாது. தமிழ்நாடு முழுக்கவே இந்த நல உதவிகளை ஒவ்வொரு பகுதியிலும் செய்ய வேண்டும். நல்ல செயல்களை விரிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.

பின்னர் ஏழை மாணவ, மாணவிகள் 150 பேருக்கு கல்வி உதவித் தொகைகள் வழங்கினார். 30 மாவட்டங்களை சேர்ந்த 30 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கினார். 38 மாவட்டங்களையும் சேர்ந்த ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். தற்போது ‘ஓம்’ படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக ‘லப்பர் பந்து’ இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ‘தமிழ் முருகன்’ படத்தில் நடிக்கிறார்.