📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 27, 2026 10:00 AM

எல் நினோ தாக்கம்: இந்தியாவில் மாறப்போகும் பருவமழை? தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு?

எல் நினோ தாக்கம்: இந்தியாவில் மாறப்போகும் பருவமழை? தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு?

எல் நினோ தாக்கம்: இந்தியாவில் மாறப்போகும் பருவமழை? தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு?

எல் நினோ தாக்கத்தால் இந்தியாவின் பருவமழையில் மாற்றங்கள் ஏற்பட்டு, வறட்சி, கனமழை மற்றும் நீர்ப்பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மழை என்பது வானத்திலிருந்து விழும் வெறும் நீர்த்துளிகள் அல்ல. ஒரு விவசாயியின் நம்பிக்கை, ஒரு குடும்பத்தின் குடிநீர், ஒரு நகரத்தின் நீர்த்தேக்கம், ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பு என நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களோடு அது பின்னிப் பிணைந்திருக்கிறது.

இந்தியாவின் பருவமழை, குறிப்பாக விவசாயம் மற்றும் நீர்வள மேலாண்மைக்கு மிக முக்கியமானது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழை முக்கிய மழைக்காலமாக உள்ளது. இந்தியாவின் ஆண்டு மழையில் சுமார் 75 சதவீதம் இந்தப் பருவத்திலேயே கிடைக்கிறது.ஆனால், பருவமழை என்பது தனித்த நிகழ்வு அல்ல. கடல் வெப்பநிலை, வளி மண்டலச் சுழற்சி, எல் நினோ போன்ற உலகளாவிய காலநிலை இயக்கங்கள், இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் மாற்றங்கள் என பல காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இப்படி உலகளாவிய காலநிலை இயக்கமுறைகளுடன்சிக்கலான முறையில் பிணைக்கப்பட்ட மாபெரும் வளிமண்டல நிகழ்வு. ஆயிரக் கணக்கான நீரோட்டங்களில் உண்டாகும் ஒரு மாற்றம். இவைதான் இந்தியாவில் உள்ள விவசாயி செழிப்பான அறுவடைக்குத் தயாராவாரா? அல்லது அழிவைச் சந்திப்பாரா என்பதைத் தீர்மானிக்க முடியும்.

தற்போது எல் நினோ மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடலாம் என்ற கருத்து கள் அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில் எல் நினோ என்றால் என்ன? அது இந்தியாவையும் குறிப்பாக தமிழ்நாட்டையும் எப்படிப் பாதிக்கக்கூடும்? அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? என்பது குறித்து சத்தியமங்கலம், மாவட்ட வன அலுவலரான கௌதம் சுப்ரமணியன் IFS அவர்களைக் கேட்டிருந்தோம்.

எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டலப் பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாகும் ஓர் இயற்கை யான காலநிலை நிகழ்வு. இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை இது உண்டாகிறது.

ஒவ்வொரு எல் நினோ நிகழ்வும் ஒரேமாதிரியாக இருக் காது. அதன் வலிமை, உருவாகும் காலம், நீடிக்கும் காலம் மற்றும் பிற காலநிலை காரணிகளுடனான தொடர்பு ஆகியவற்றைப் பொறுத்து அதன் தாக்கங்கள் மாறுபடுகின்றன.

வரலாற்று ரீதியாக எல் நினோ ஆண்டுகள் இந்தியாவில் வறட்சி நிலைகளுடன் வலுவாக தொடர்பில் இருந்துள்ளன. எனினும் இது மோசமடைந்து வருகிறது. புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் எல் நினோ நிகழ்வுகளின் அதிர்வெண் மற்றும் தீவிரமானது சூப்பர் எல் நினோ என்று அழைக்கப்படும் அளவுக்கு அதிகரித்துள்ளன.

இதனால், மழை குறுகிய காலத்தில் அதிக அளவில் பெய்து, அதற்கிடையில் நீண்ட வறண்ட காலங்கள் ஏற்படும். ஒரு பகுதியில் கிடைக்கும் மொத்த மழையின் அளவு மட்டும் முக்கியமல்ல; மழை எப்போது, எவ்வளவு, எந்தப் பகுதியில் பெய்கிறது என்பதும் மிக முக்கியம்.ஒரே நேரத்தில் அதிக அளவு மழை பெய்தால், அந்த நீரின் ஒரு பகுதி நிலத்தடியில் ஊடுருவுவதற்குப் பதிலாக வெள்ளமாக வெளியேறக்கூடும். மறுபுறம், மழை நீண்ட காலம் இடைவெளி விட்டுப் பெய்தால் வறட்சி மற்றும் நீர்ப்பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

இந்தியாவின் இரண்டு முக்கிய பருவக் காற்றுகள் என்று தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவக்காற்றுகள் எனச் சொல்லலாம். இந்தியாவின் காலநிலையைப் புரிந்துகொள்ள இந்த இரண்டு தனித்துவமான பருவக்காற்றுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தென்மேற்கு பருவக்காற்று ஜூன் முதல் செப்டம்பர் வரை இருக்கும். இது முதன்மை மழைக்காலம். இந்தியாவுக்கு ஆண்டுக்கு கிடைக்க வேண்டிய 75% மழை இப்போது பொழியும். கோடைக்காலத்தில் கடுமையாக வெப்பமடையும். இந்தியப் பெருங்கடலில் இருந்து ஈரப்பதம் நிறைந்த காற்று, குறைந்த காற்றழுத்த வெற்றிடத்தை நிரப்ப விரைந்து வருகிறது.

இது கேரள கடற்கரையைக் கடந்து மேல்நோக்கிப் பயணித்து மத்திய, வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவுக்கு மழையை கொண்டுவருகிறது. இந்த மழை விவசாயம், நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியமானது.வானிலை முறைகளின் விளைவுகள் தீவிரமாக அதன் பாதிப்பை வெளிப்படுத்தினால் அது வானிலை அசாதாரணங்கள் என்பதை விட சாமானிய குடும்பங்களைக் கடுமையாக பாதிக்கலாம். இந்த யதார்த்தமான உண்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

வடகிழக்குப் பருவமழையைப் பெரிதும் நம்பியிருக்கும் தமிழ்நாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை கவனத்தில் கொள்ளவேண்டும்.மேற்கு தொடர்ச்சி மலைகள் தீபகற்ப நதிகளுக்கு ஒரு முக்கிய நீர்பிடிப்புப் பகுதியாகச் செயல்படுகின்றன. எல் நினோ நிகழ்வு தென்மேற்குப் பருவமழையைத் தடுக்கும்போது, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருக்கும் நீர்த்தேக்கங்கள் வறண்டு விடுகின்றன. அதைத்தொடர்ந்து வடகிழக்குப் பருவமழையும் பாதிக்கப்பட்டால் அல்லது சீரற்றதாக இருந்தால் அதிக நெருக்கடியைச் சந்திக்கும்.

இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?