என் மகனை பார்த்து பெருமைப்படுறேன்.. SA சந்திரசேகர் உருக்கமான பதிவு!
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்பப்போதும் இல்லாத வகையில், தமிழக முதலமைச்சராக தளபதி விஜய் பொறுப்பேற்றதிலிருந்து தமிழக அரசியல் களம் தினமும் உச்சகட்ட பரபரப்பில் இயங்கி வருகிறது. முக்கியமாக, இதுவரை அரசியல் செய்திகளையோ, சட்டமன்ற நடவடிக்கைகளையோ பெரிதாக கண்டுகொள்ளாத இளம் தலைமுறையினர் , இப்போது தமிழக சட்டமன்ற நிகழ்வுகளையும் அரசியல் விவாதங்களையும் தொலைக்காட்சிகளிலும் சோஷியல் மீடியாவிலும் மிகவும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர். அரசியல் களத்தில் விஜயின் இந்த அதிரடி என்ட்ரிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது.
முதல்வர் விஜயின் மாஸ் ஸ்பீச்: இன்று தமிழகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கம்பீரமாகவும், சாட்டையடி பேசினார். அவர் பேசிய அந்த மாஸான வீடியோ கிளிப்பிங்ஸ், இணையத்தில் வெளியானதுமே எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
SAC உருக்கமான பதிவு: இந்நிலையில் எஸ்.ஏ சந்திரசேகர் தனது இன்ஸ்டாகிராமில், மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், முதல் புகைப்படத்தில் முதலமைச்சர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோருடன் சிரித்த முகத்தோடு காட்சிளிக்கிறார். இரண்டாவது புகைப்படத்தில் தந்தையும் மகனும் அருகருகே இருக்கும் போட்டோவை பகிர்ந்து, எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாக கையாளும் முதல்வரை சந்தித்தது, ஒரு தந்தையாகப் பெருமைப்பட்ட நேரம் என எஸ்.ஏ.சந்திரசேகர் மனமுருகி குறிப்பிட்டுள்ளார். இணையத்தை கலக்கும் 'தவெக' தொண்டர்கள்: SAC-ன் இந்த நெகிழ்ச்சியான பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே சோஷியல் மீடியாவில் புயலைக் கிளப்பியுள்ளது. விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிழக தொண்டர்கள் இந்தப் புகைப்படங்களை இணையமெங்கும் ஷேர் செய்து வருகின்றனர்