Tamil Nadu
August 31, 2026 12:03 AM
எங்கள் குழுவினர் சீன பகுதிக்குள் சிக்கியுள்ளனர்: சென்னை குரோம்பேட்டை டிராவல்ஸ் உரிமையாளர் மறவேள் பரபரப்பு பேட்டி
எங்கள் குழுவினர் சீன பகுதிக்குள் சிக்கியுள்ளனர்: சென்னை குரோம்பேட்டை டிராவல்ஸ் உரிமையாளர் மறவேள் பரபரப்பு பேட்டி
சென்னை: நேபாளத்திற்கு சென்று வந்த சென்னை குரோம்பேட்டை டிராவல்ஸ் உரிமையாளர் மறவேள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது; குடியுரிமை மையத்தின் வெள்ள பாதிப்பு சிசிடிவி காட்சியில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள் எங்கள் குழுவினர் தான். மலை மேல் ஓடியவர்கள் ஒரு சிலர் தப்பியிருக்கலாம். சீன பகுதிக்குள் ஓடியுள்ளனர். அந்த பகுதி முழுவதும் 6 அடி உயர சேற்றால் மூடப்பட்டுள்ளது. எங்கள் 3 குழுவும் இதில் சிக்கி உள்ளனர். வெள்ள பாதிப்பு குறித்து நேபாள அரசின் தகவல் மட்டுமே கிடைக்கிறது. சீன அரசு மூலம் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்கள் குழுவினர் சீன பகுதிக்குள் சிக்கியுள்ளனர். என அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu