📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 17, 2026 11:03 PM

என்னா மாதிரி ஆட்டம் இது.. ருத்ர தாண்டவம் ஆடிய நமன் திர்.. மழையால் எல்லாம் மாறிப்போச்சு!

என்னா மாதிரி ஆட்டம் இது.. ருத்ர தாண்டவம் ஆடிய நமன் திர்.. மழையால் எல்லாம் மாறிப்போச்சு!

என்னா மாதிரி ஆட்டம் இது.. ருத்ர தாண்டவம் ஆடிய நமன் திர்.. மழையால் எல்லாம் மாறிப்போச்சு!

பெங்களூர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் நமன் திர் 6 பந்துகளில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்களை விளாசி அசத்தினார். அத்தனை பந்துகளையும் மிடில் ஆஃப் தி பேட்டில் விளாசிய நமன் திர், மொத்த மொமண்ட்டத்தையும் மாற்றினார். ஆனால் திடீரென மழை பெய்ததால், ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி மழை காரணமாக பாதியுடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை முதலே பெங்களூரில் கடுமையான மழை பெய்து வந்த சூழலில், ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. அதேபோல் திட்டமிட்டபடி 7 மணிக்கு டாஸ் போடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சுமார் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்த நிலையில், ஆட்டம் 9 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் 9 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. இதன்பின் இந்திய அணி முதல் பேட்டிங் செய்த நிலையில், இஷான் கிஷனின் அதிரடியான ஆட்டத்தால் 2.3 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 50 ரன்களை கடந்தது.

ஆனால் இஷான் கிஷன் 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் சஞ்சு சாம்சன் 16 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் நமன் திர் களம் புகுந்தார். கீமோ பால் வீசிய 7வது ஓவரில் நமன் திர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸ், 2வது பந்தில் பவுண்டரி, 3வது பந்தில் சிக்ஸ் என்று விளாசினார்.

தொடர்ந்து ஸ்பிரிங்கர் வீசிய 8வது ஓவரின் முதல் பந்திலும் நமன் திர் சிக்ஸரை விளாசி தள்ளினார். இதனால் நமன் திர் 6 பந்துகளில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்களை விளாசி தரமான ஃபார்மில் இருந்தார். இந்திய அணியின் ஸ்கோரும் 7.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்களாக இருந்தது.

இதனால் நமன் திர் கடைசி ஓவரில் ஒரு ருத்ர தாண்டவம் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, திடீரென மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காரணமாக ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. நமன் திர் பேட்டிங்கில் மொத்த மொமண்ட்டத்தையும் இந்திய அணி பக்கம் மாற்றிய நிலையில், மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.