எந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு....வானிலை எச்சரிக்கை!
எந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு....வானிலை எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை நீடித்து வருவதால் தமிழகத்தில் பல பகுதிகளில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. இது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம்,காஞ்சிபுரம்,மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பகல் நேரத்தில் வெப்பநிலை சுமார் 36 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்த வரையில் வெப்பநிலை சுமார் 38 டிகிரி செல்சியஸ் வரை செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இடி,மின்னல் ஏற்படும் நேரங்களில் திறந்தவெளி, மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அருகில் நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் திடீர் மழை மற்றும் பலத்த காற்றை கருத்தில் கொண்டு கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.