நஜ்ரான் தமிழ் மன்ற உதவியால் தாயகம் திரும்பிய இரு தமிழ் செவிலியர்கள்
நஜ்ரான் தமிழ் மன்ற உதவியால் தாயகம் திரும்பிய இரு தமிழ் செவிலியர்கள்ஜெத்தா: தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சுஸ்மிதா மற்றும் சாமிலி பிரியா ஆகிய இரு செவிலியர்கள், சவுதி அரேபியாவின் அபஹா நகரில் செவிலியர்களாகப் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், வேலை தொடர்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.வேலை இல்லாத நிலையில், அவர்களது இக்காமாவும் புதுப்பிக்கப்படாமல் இருந்ததால், தாயகம் திரும்ப முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். இதையடுத்து, ஜெத்தா இந்திய துணைத் தூதரகத்தின் உதவியுடன் இருவருக்கும் Final Exit பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இதனைத் தொடர்ந்து, இருவரும் தாயகம் திரும்புவதற்கான முழுமையான பயண ஏற்பாடுகளையும் நஜ்ரான் தமிழ்மன்றத்தின் தலைவர் முனைவர் மகேஸ்வரி கணசேன் ஏற்றுக்கொண்டார். தமிழ்மன்றத்தின் சார்பில் இருவருக்கும் விமானப் பயணச்சீட்டுகளும் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டன.இதன் மூலம், கடந்த 15.08.2026 அன்று ஜெத்தா விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட இருவரும் பாதுகாப்பாக சென்னை சென்றடைந்தனர்.தாங்கள் எதிர்கொண்ட சிரமங்களிலிருந்து மீண்டு தாயகம் திரும்புவதற்கு பெரிதும் உதவிய நஜ்ரான் தமிழ்மன்றத்தின் தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் சுஸ்மிதா மற்றும் சாமிலி பிரியாவின் குடும்பத்தினர் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.- ஜெத்தாவில் இருந்து காஜா மைதீன்