EPFO சிறப்பு பதிவு முகாம் 2026 : இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன ? முழு விவரம்
மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி (EPFO ) தற்போது தொழிலாளர்களுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை துவங்கியிருக்கிறது. ஊழியர்கள் சேர்க்கை முகாம் 2026 (Employees' Enrolment Campaign 2026) என்ற முகாமை துவங்கியிருக்கிறது. இந்த நிலையில் இந்த முகாம் யாருக்காக ? இதன் பயன் என்ன ? என்பதை தற்போது பார்க்கலாம்உங்களுடைய PF மாற்று இன்சூரன்ஸ் பிடித்தம் செய்யப்படாமல் இருந்தால் அவர்களை சேர்க்கவே இந்த சிறப்பு முகாம் துவங்கப்பட்டு இருக்கின்றது. ஏப்ரல் 1 2009 முதல் மார்ச் 31 2026 வரை நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து PF, பென்ஷன் அல்லது இன்சூரன்ஸ் பிடித்தம் செய்யப்படாமல் இருந்தால் அவர்களை இந்த திட்டத்தில் சேர்க்கவே EPFO இதனை துவங்கியிருக்கிறது.இதன் நன்மைகள்நிறுவனங்கள் விடுபட்ட ஊழியர்களின் விவரங்களை சரிபார்த்து அவர்களை சேர்ப்பதற்கு அக்டோபர் 31 2026 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் நிறுவனங்கள் ஊழியர்களை PF திட்டத்தில் சேர்க்க வேண்டும். இந்த திட்டத்தில் இணைவதற்கான தகுதி என்னவென்றால், ஒரு தொழிலாளி 2009 முதல் 2026 ஆம் ஆண்டு வரை நிறுவனங்களில் வேலை செய்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தற்போது உயிரோடு மற்றும் அதே நிறுவனத்தில் வேலையில் இருக்க வேண்டும். மேலும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பழைய நிலுவை தொகையை கட்டும் நிறுவனங்களுக்கு எந்த அபராதமும் இல்லை.அவர்களுக்கு விலக்கு வழங்கப்படுகின்றதுபதிவு செய்வதற்கான வழிகள்நிறுவனங்கள் தகுதியான ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் தொழிலாளர்களின் UAN எண்ணை UMANG செயலி மூலம் முக அங்கீகாரம் செய்து மிக எளிதாக உருவாக்கலாம். நேரில் எந்த ஒரு ஆவணத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை. ஆன்லைன் மூலமே இதற்கு பதிவு செய்யலாம்EPFO வில் இணைக்கப்பட்டவுடன் கிடைக்கும் நன்மைகள்1.12 % பங்களிப்பு நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும்2.நீங்கள் பத்து ஆண்டுகள் வேலை செய்திருந்தால் 58 வயதிற்கு பிறகு ஆயுள் முழுவதும் மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும்3.EDLI திட்டத்தின் கீழ் 7 லட்சம் இலவச ஆயுள் காப்பீடு கிடைக்கும்இவ்வாறு EPFO வின் இந்த சிறப்பு முகாம் மூலம் ஊழியர்கள் பலர் பயனடைவார்கள் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது