EPS 95 குறைந்தபட்ச பென்ஷன் உயர்விற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் : அரசு விளக்கம்
EPS 95 சட்டத்தின் படி குறைந்தபட்ச மாதாந்திர பென்ஷன் தொகையை 1000 ரூபாயில் இருந்து 7500 ரூபாயாக உயர்த்துமாறு ஓய்வூதிய ஊழியர்கள் நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டு வருகின்றனர். 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியர்கள் இந்த பென்சன் தொகை அதிகரிப்பை ஆவலோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் இதுகுறித்து நிச்சயமற்ற நிலை தான் தொடர்ந்து வருகின்றது.இன்னும் பென்சன் தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து 7500 ரூபாயாக அதிகரிக்கும்படி எந்த ஒரு அதிகாரபூர்வ முடிவையும் எடுக்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளனர்.இதுகுறித்து மக்களவையில் பேசப்பட்டது. அப்போது ஓய்வூதியத்தை உயர்த்தும் முடிவை இன்னும் எடுக்கவில்லை என அரசு விளக்கம் கொடுத்துள்ளனர்.அதற்கான காரணத்தையும் கூறி விளக்கம் கொடுத்தனர். பென்சன் நிதியின் நிதி நிலைத்தன்மை மற்றும் பற்றாக்குறை ஆகியவை பென்சன் தொகையை உயர்த்தி தருவதற்கு தடைகளாக இருப்பதாக அரசு தரப்பில் இருந்து விளக்கம் வந்துள்ளதுஇந்த திட்டத்தில் இருக்கும் நிதி சவால்கள் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்தான விவாதம் சிக்கலான நிதி நிலைத்தன்மையை உள்ளடக்கியது. இந்த ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து தீர்மானிக்கும் முக்கியமான மூன்று காரணிகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்பங்களிப்பு முறை நிறுவனத்தின் 12 % பிங்கிலிருந்து ஊழியர்களுக்கு 8 % பென்ஷனாக செல்கின்றது. மேலும் 1 % மானியத்தை மத்திய அரசு வழங்குகிறதுநிதி பற்றாக்குறைஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து 7500 ரூபாயாக கூட்டுவது என்பது கூடுதல் நிதி பொறுப்பை உருவாக்கும். ஏற்கனவே இருக்கும் நிதி பற்றாக்குறையில் இந்த ஓய்வூதிய உயர்வு மேலும் நிதி பற்றாக்குறையை அதிகரிக்கும்ஓய்வூதியம் வாங்குவோரின் எண்ணிக்கை ஓய்வூதியம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் இருக்கின்றது. தற்போதே 78 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்கள் இருக்கின்றார்கள். எதிர்காலத்தில் மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.எனவே நிதிச்சுமை இவர்களை எல்லாம் பாதிக்கக்கூடும்.இந்நிலையில் ஊழியர்கள் ஓய்வூதியத்தை மட்டும் நம்பி இருக்கலாம் சிறப்பான எதிர்காலத்தை பெறுவதற்கு முதலீடு செய்வதையும் அவசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இன்றைய முதலீடு தான் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது