Sports
August 28, 2026 08:03 AM
‘எஸ்ஆர்சி’யின் பில்லியர்ட்ஸ் அறை தொடர்பில் வழக்கு
சிங்கப்பூர் பொழுதுபோக்கு மன்றத்தில் (எஸ்ஆர்சி) உள்ள பில்லியர்ட்ஸ் விளையாட்டு அறையைக் கூட்டு வேலை அறையாக (co-working space) மாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.
அதற்கு எதிராக பில்லியர்ட்ஸ் அறையில் பணியாற்றிய இருவர் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு தொடுத்தனர். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்துக்கு நீதிமன்ற வழக்கின் மூலம் தீர்வுகாண உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) அனுமதி அளித்துள்ளார்.
பில்லியர்ட்ஸ் அறையை மாற்றியமைக்க வகைசெய்யும் தீர்மானத்தை எஸ்ஆர்சி உறுப்பினர்கள் நிறைவேற்றியிருந்தனர். அந்தத் தீர்மானம் செல்லுபடியாகாது என்று எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
Sports