📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 22, 2026 10:02 AM

“எதிரியே இருக்கக்கூடாது”

“எதிரியே இருக்கக்கூடாது”

“எதிரியே இருக்கக்கூடாது”- விஜயின் வித்தியாசமான அரசியல் பாணி

அதிமுக போல திமுகவுக்கும் எதிர்காலம் இல்லை என்ற பிம்பத்தை உருவாக்கவும், அந்த வெறுமையைப் பயன்படுத்தித் தவெகவின் வளர்ச்சியை உறுதி செய்யவும் ஒரு திட்டமிட்ட அரசியல் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பாரம்பரிய அரசியலின் மீது சலிப்படைந்தவர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் இளைஞர்களைக் கவர்வதற்காக, இந்த வலை வீசும் படலத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முக்கியப் பங்காற்றுகிறார். இது வெறும் கட்சி விரிவாக்கம் சார்ந்தது மட்டுமல்லாமல், தமிழகத்தின் அதிகார மையத்தை மாற்றும் இலக்கையும் கொண்டது. எத்தனை மீன்கள் இந்த வலையில் விழப்போகின்றன என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும் என்றாலும், இந்தப் போக்கு திராவிடக் கட்சிகளின் மேலாதிக்கத்திற்கு ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. பொதுவாக அரசியலில் ஒரு எதிரியை வீழ்த்துவது என்பது பலமான போராட்டங்கள் மற்றும் விமர்சனங்கள் மூலமே நடைபெறுவது வழக்கம். ஆனால் விஜய்யின் அரசியல் பாணி முற்றிலும் வேறானது. எதிரியை நேரடியாகத் தாக்குவதை விட, எதிரியின் பலத்தை மழுங்கடித்து, அந்தத் தரப்புக்குத் தேவையில்லாத சூழலை உருவாக்கி, எதிரியே இல்லாமல் செய்வதுதான். இது அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், அதே சமயம் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அரசியல் விளையாட்டில் தவெகவின் வெற்றி என்பது, திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கியை எவ்வளவு தூரம் தன்பக்கம் ஈர்க்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். பாரம்பரியக் கட்சிகளின் மீதுள்ள அதிருப்தியை அறுவடை செய்யும் இந்த உத்தி வெற்றி பெற்றால், தமிழக அரசியலில் இதுவரை நிலவி வந்த இரு துருவ அரசியல் முறை முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.