📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 22, 2026 05:34 PM

எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; 3வது நாளாக முடங்கியது பார்லிமென்ட்

எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; 3வது நாளாக முடங்கியது பார்லிமென்ட்

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 22) லோக்சபா எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். ராஜ்யசபாவும் அமளி காரணமாக மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (ஜூலை 20) தொடங்கியது. முதல் நாளில், 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீஸ் நடத்திய தடியடி உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா, ராஜ்யசபா என, இரு சபைகளும் எந்த அலுவல்களுமின்றி முடங்கின.

நேற்று, இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட, அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்ட சபை, பின், நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.