📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 16, 2026 02:03 AM

நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு: அமைச்சர் ரமேஷ் கண்டனம்

நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு: அமைச்சர் ரமேஷ் கண்டனம்

தாய்மார்களும் பெண்களும் முகம் சுளிக்கும் வகையில் நயினார் நாகேந்திரன் பேசியிருப்பதற்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம். இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அருவருப்பின் உச்சம்

ஒரு அரசியல் கட்சியின் மாநில தலைவராக மட்டுமல்ல, குறைந்தபட்சம் ஒரு சாதாரண மனிதரிடம் இருக்க வேண்டிய நாகரிகம் கூட இல்லாமல், தாய்மார்களும் பெண்களும் முகம் சுளிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

தவறான பார்வை

தரக்குறைவான பேச்சுக்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள், நயினார் நாகேந்திரன் அவர்களே!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.