📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 03, 2026 07:32 AM

 எட்டப்பர் என விமர்சித்த ராகுல்; நச்சுப்பாம்பு என திமுக பதிலடி

 எட்டப்பர் என விமர்சித்த ராகுல்; நச்சுப்பாம்பு என திமுக பதிலடி

- நமது நிருபர் -

''லோக்சபா தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் கட்சிகள், 21ம் நுாற்றாண்டின் எட்டப்பர்கள்,'' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தெரிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் - தி.மு.க., மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

பா.ஜ.,வுக்கு துணை தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான, பத்து நாள் பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் நேற்று முன் தினம் நிறைவடைந்தது.

நிறைவு விழாவில் பங்கேற்க, சென்னை வந்த ராகுல், 'லோக்சபா தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் கட்சிகள், 21ம் நுாற்றாண்டின் எட்டப்பர்கள்' என, விமர்சித்தார்.

தி.மு.க.,வை குறி வைத்தே, ராகுல் அவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. இது, கடும் விவாதமாக மாறியுள்ளது. 'காவிரியில் தமிழகத்தின் உரிமையை யார் விட்டு கொடுக்கின்றனரோ, அவர்கள் தான் எட்டப்பர்,' என தி.மு.க., தரப்பில், பதில் கூறி வருகின்றனர்.

இதையடுத்து, 'ராகுல் பேசியது, பா.ஜ.,வுக்கு துணை போகும் கட்சிகளுக்கான எச்சரிக்கை. அதை, தி.மு.க., திசைதிருப்புவது அரசியல் நாடகம்' என, காங்கிரஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, தி.மு.க., - காங்கிரஸ் கட்சியினர் இடையே, சமூக வலைதளங்களில், கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தி.மு.க., - எம்.பி., தயாநிதி வெளியிட்ட அறிக்கையில், 'நம்பிக்கையை விற்று பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்; தமிழகத்திற்கு வந்தும் கூட, காவிரி உரிமை குறித்து பேசாதவர்கள் தான் துரோகிகள்.

'தமிழகத்திற்கு வந்த ஒருவர், அரசியல் பாடம் எடுத்ததை படித்தபோது, இதெல்லாம் நினைவுக்கு வந்தது. அப்பப்பா, எவ்வளவு துரோகங்கள்' என கூறியுள்ளார்.

பார்லிமென்டில், தொகுதி மறுசீரமைப்பு மசோதா, அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. கடந்த காலத்தில், தொகுதி மறுவரையறைக்கு எதிராக, தி.மு.க., குரல் கொடுத்தது. அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.இந்நிலையில், 'தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து ஓட்டளிக்காதவர்கள் எட்டப்பர்கள்' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட எட்டப்பர்களின் பட்டியலில், தற்போது அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளன. இனி புதிதாக யார் சேரப்போகின்றனர் என்பதை, தி.மு.க.,விடம் தான் கேட்க வேண்டும்.மேகதாது விவகாரத்தில், கர்நாடக முதல்வர் சிவகுமார் கர்நாடக நலனுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார். முதல்வர் விஜய், கர்நாடகா சென்று, முதல்வர் சிவகுமாரிடம் பேசுவதில் தவறில்லை.- மாணிக்கம் தாகூர், தலைவர், தமிழக காங்.,