📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 30, 2026 11:30 AM

எவ்வளவு சொல்லியும் மனம் மாறாத நடிகை.. பிளாக் லிஸ்ட்டில் போட்ட அம்மா.. என்னதான் கதை?

எவ்வளவு சொல்லியும் மனம் மாறாத நடிகை.. பிளாக் லிஸ்ட்டில் போட்ட அம்மா.. என்னதான் கதை?

சென்னை: திரைத்துறையில் ஹீரோயினாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் இளம் நடிகைகள் சந்திக்கும் சவால்கள் குறித்து அடிக்கடி பல கதைகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் சமீபத்தில் கோலிவுட் வட்டாரத்தில் பரவி வரும் ஒரு கிசுகிசு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிப்பில் தீவிர ஆர்வம் கொண்ட ஒரு இளம் நடிகைக்கு, சொந்த வீட்டிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியிருப்பதாக கூறப்படுகிறது.

அந்த நடிகை சினிமாவில் வாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருந்தபோது, சிலரிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்தாராம். இதையெல்லாம் கவனித்த குடும்பத்தினர், குறிப்பாக அவரது அம்மா, சினிமா உலகம் அவ்வளவு எளிதானது கிடையாது என்று பலமுறை எச்சரித்ததாக சொல்லப்படுகிறது.

வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் யாரை வேண்டுமானாலும் நம்பிவிடக் கூடாது. இந்த துறையில் திறமை மட்டுமல்ல, பல்வேறு சோதனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக பெண்கள் மீது தவறான அணுகுமுறைகள், அட்ஜஸ்ட்மென்ட் அழுத்தங்கள், பொய்யான வாக்குறுதிகள், மன உளைச்சல்கள் என பல விஷயங்கள் இருப்பதாகக் கேள்விப்பட்ட குடும்பத்தினர், மகள் அந்தச் சூழலில் சிக்கிவிடக் கூடாது என்பதில் மிகவும் கவலையாக இருந்தார்களாம்.

பிளாக் லிஸ்ட்டில் போட்ட அம்மா: அதன் உச்சமாக, மகள் மீண்டும் மீண்டும் சினிமா தொடர்பான பேச்சுகளிலேயே இருந்ததால், "இப்போதைக்கு என்னிடம் பேசவே வேண்டாம்" என்ற மனநிலைக்கு சென்ற அம்மா, நேரடியாக அவருடைய வாட்ஸ்அப் எண்ணையே பிளாக் செய்து விட்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கப்சிப்: இந்த சம்பவம் நடிகையை மிகவும் பாதித்ததாகவும், சில நாட்கள் வீட்டிலேயே அமைதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அம்மாவின் இந்த முடிவு கோபத்தால் எடுக்கப்பட்டது அல்ல என்றும், மகளின் பாதுகாப்பு மட்டுமே அவருடைய முதல் கவலையாக இருந்தது என்றும் நெருங்கிய வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

நியாயமான பயம்: திரைத்துறையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள் மட்டுமே வெளியில் தெரியும். ஆனால் அதற்கு பின்னால் தோல்விகள், ஏமாற்றங்கள், தவறான அணுகுமுறைகள், மன அழுத்தங்கள் போன்றவை ஏராளம் இருக்கின்றன. அதனால்தான் பல பெற்றோர்கள் இன்னும் தங்கள் மகள்களை சினிமா பக்கம் அனுப்ப தயங்குகிறார்கள் என்றும் பேசப்படுகிறது. ஆனால் " சினிமாவை விட மகளின் பாதுகாப்புதான் முக்கியம்" என்ற எண்ணத்தில் ஒரு தாய் எடுத்த கடுமையான முடிவாக இதை கோலிவுட் வட்டாரத்தில் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.