📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 19, 2026 11:33 PM

FIFA WC 2026: தங்க ஷூவை வெல்லப்போவது யார்? அசிஸ்ட் என்றால் என்ன? எம்பாபே, மெஸ்ஸி இடையே போட்டி

FIFA WC 2026: தங்க ஷூவை வெல்லப்போவது யார்? அசிஸ்ட் என்றால் என்ன? எம்பாபே, மெஸ்ஸி இடையே போட்டி

FIFA WC 2026: தங்க ஷூவை வெல்லப்போவது யார்? அசிஸ்ட் என்றால் என்ன? எம்பாபே, மெஸ்ஸி இடையே போட்டி

நியூயார்க்: பிஃபா உலகக் கோப்பை 2026 தொடரில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே முதலிடத்தைப் பிடித்துள்ளார். மியாமியில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான பிளே-ஆஃப் போட்டியில் 27 வயதான எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்தார். இதன் மூலம் நடப்பு தொடரில் அவரது மொத்த கோல்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

பிஃபா உலகக் கோப்பை 2026 கோல்டன் பூட் பந்தயத்தில், எம்பாப்பே 10 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதே நேரத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஏழு போட்டிகளில் எட்டு கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் ஸ்பெயினுக்கு எதிராக நடைபெறும் பிஃபா உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியில் மெஸ்ஸி குறைந்தது இரண்டு கோல்களாவது அடிக்கத் தவறினால், எம்பாப்பே தொடர்ந்து இரண்டாவது முறையாக பிஃபா உலகக் கோப்பை கோல்டன் பூட் விருதை வெல்வார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் கைலியன் எம்பாப்பே 10 கோல் மற்றும் 4 அசிஸ்ட்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். லியோனல் மெஸ்ஸி 8 கோல் மற்றும் 4 அசிஸ்ட்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜூட் பெல்லிங்ஹாம் 7 கோல், 1 அசிஸ்ட், எர்லிங் ஹாலண்ட் 7 கோல், 0 அசிஸ்ட் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து பிரான்சின் உஸ்மான் டெம்பேலே 6 கோல்கள், இங்கிலாந்தின் ஹாரி கேன் 6 கோல்கள், மற்றும் ஸ்பெயினின் மைக்கேல் ஓயர்சபால் 5 கோல்களுடன் பட்டியலில் அடுத்த இடங்களில் உள்ளனர். மேலும், இஸ்மைலா சார், ஜூலியன் குய்னோன்ஸ் மற்றும் வினிசியஸ் ஜூனியர் ஆகியோர் தலா 4 கோல்களுடன் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

பிஃபா உலகக் கோப்பை வரலாற்றில், எந்தவொரு வீரரும் அடுத்தடுத்த தொடர்களில் கோல்டன் பூட் விருதை வென்றதில்லை. ஒரு வேலை இறுதிப் போட்டியில் மெஸ்ஸியும் 2 கோல் அடித்து, எம்பாபேவை சமன் செய்தால், தங்க காலணியை யார் வெல்வார்கள் என்பதை தற்போது காணலாம். ஒரு வேலை, கோல் எண்ணிக்கை சமனாகி இருந்தால், அதன் பிறகு அசிஸ்ட்களை வைத்து வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள், அது என்ன அசிஸ்ட் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம்.

அசிஸ்ட் என்றால், உதவுவது என்று அர்த்தம். அதாவது நாம் கோல் அடிக்கவில்லை என்றாலும், மற்ற வீரர்கள் கோல் அடிக்க பந்தை கடத்தி தருவது பெயர் தான் அசிஸ்ட். உதாரணத்திற்கு மெஸ்ஸி கோல் அடிக்க பந்தை கடத்தி வருகிறார். அப்போது, அவரை எதிரணியினர் சூழ்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அப்போது மெஸ்ஸி, அருகில் உள்ள சக அணி வீரருக்கு பந்தை பாஸ் செய்ய, அதை அவர் கோல் அடித்தால், அது மெஸ்ஸிக்கு அசிஸ்ட் கணக்கில் வந்துவிடும். அப்படி நடப்பு உலககோப்பையில் மெஸ்ஸி 4 முறை மற்ற வீரர்கள் கோல் அடிக்க பந்தை கடத்தி தந்துள்ளார்