GDN Day 2 Box Office
சென்னை: கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ஜிடிஎன். ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படம். நேற்று முன்தினம் திரையரங்குகளில் ரிலீஸான சூழலில்; அதன் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
மேடி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் மாதவன் கடந்த சில வருடங்களாகவே பயோபிக் மீது ஆர்வம் செலுத்திவருகிறார். அதற்கு காரணம் ராக்கெட்ரி திரைப்படம். இஸ்ரோவில் பணியாற்றிய முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி அந்தப் படத்தை இயக்கினார். அது சுமாரான வரவேற்பைதான் பெற்றது. இருப்பினும் நல்ல முயற்சி என்ற பெயரையும் பெற்றது. தேசிய விருதையும் வென்றது. இப்போதைய தலைமுறையினருக்கு இது மாதிரியான படங்களை அதிகம் கொடுக்க வேண்டும் என்ற பேச்சுக்களும் எழுந்தன.
ஜிடி நாயுடு வாழ்க்கை: அதனையடுத்து நடிகரும், இயக்குநருமான கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் ஜிடிஎன் படத்தில் நடிக்க கமிட்டானார் மாதவன். இது இந்தியாவின் எடிசன் என புகழப்படும் தமிழ்நாட்டில் வசித்த விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் ஜிடி நாயுடுவாக மாதவன் நடித்திருக்கிறார். இவருடன் சத்யராஜ் உள்ளிட்டோரும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
எப்படி இருக்கு படம்?: நேற்று முன்தினம் திரையரங்குகளில் படம் ரிலீஸானது. படத்துகு ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் படு ஜோராக நடந்திருந்தன. மாதவன் உள்ளிட்டோர் எல்லாம் பறந்து பறந்து பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தார்கள். எதிர்பார்த்தபடியே ரசிகர்களுக்கு படம் ரொம்பவே பிடித்துவிட்டது. பெண்கள், குழந்தைகள் என பலதரப்பட்ட ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருகிறார்கள். போட்டியாக டிசி திரைப்படம் வெளியானாலும் ஜிடிஎன் தன்னுடைய ட்ராக்கில் நல்லபடியாகவே போய்க்கொண்டிருக்கிறது.
மாதவன் அட்டகாசம்: படத்தின் தூணாக மாதவனே விளங்குகிறார். ஜிடி நாயுடு கெட்டப் அவருக்கு பக்காவாக பொருந்திப்போகிறது. வெறும் கெட்டப்பில் மட்டுமில்லாமல் உடல்மொழியிலும், நடிப்பிலும் மெர்சல் செய்தார் என்றே ரசிகர்கள் கூறுகிறார்கள். இதுமாதிரியான படங்களை மாதவன் கொடுப்பது மாதிரி இன்னும் பல நடிகர்கள் கொடுத்தால்தான்; முன்னோர்களின் அருமை இப்போதைய தலைமுறையினருக்கு புரியும் என்பது ரசிகர்கள் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.
வசூல் நிலவரம் இதோ: இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, படத்தின் தமிழ் வெர்ஷன் முதல் நாளில் அந்தப் படம் 46 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்து ஷாக் கொடுத்தது. ஆனால் இரண்டாவது நாளான நேற்று விடுமுறை என்பதால் கூட்டம் அதிகளவு தியேட்டருக்கு வந்தது. அதன் பலனாக நேற்றைய வசூல் மொத்தம் 84 லட்சம் ரூபாயாக இருக்கிறதாம். அதேபோல் தெலுங்கில் முதல் நாள் வெறும் 7 லட்சத்தை வசூலித்த ஜிடிஎன்; நேற்று 9 லட்சத்தை வசூலித்திருக்கிறது. ஆகமொத்தம் இரண்டு நாட்களில் தமிழ், தெலுங்கு மொழிகளை சேர்த்து அப்படம் ஒரு கோடியே 46 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறதாம்.