📅 Monday, 15 June 2026 IST | ஆனி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 15, 2026 10:30 AM

GK Vasan Join DMK Alliance : காங்கிரஸ் போனால் போகட்டும்.! நான் இருக்கிறேன்... ஸ்டாலினோடு கை கோர்க்கும்

GK Vasan Join DMK Alliance : காங்கிரஸ் போனால் போகட்டும்.! நான் இருக்கிறேன்... ஸ்டாலினோடு கை கோர்க்கும்

GK Vasan Join DMK Alliance : காங்கிரஸ் போனால் போகட்டும்.! நான் இருக்கிறேன்... ஸ்டாலினோடு கை கோர்க்கும் ஜி.கே.வாசன்.? திடீர் ட்விஸ்ட்

DMK Alliance : அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இணைய காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் விரைவில் இதற்கான சூழல் உருவாகும் என கூறப்படுகிறது.

உடைந்தது திமுக கூட்டணி

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. அந்த வகையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த திமுக கூட்டணி சுக்கு நூறாக உடைந்துள்ளது. கடந்த 9 வருடங்களில் திமுக கூட்டணி வெற்றி கூட்டணியாகவே பார்க்கப்பட்டடது.குறிப்பாக உள்ளாட்சி மன்ற தேர்தல், இடைத்தேர்தல், 2 நாடாளுமன்ற தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் என அடுத்தடுத்து வெற்றியை பெற்றது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு புதிதாக அரசியலில் களம் இறங்கிய விஜய் கட்சியான தவெகவிடம் தோல்வி தழுவியது. இதனையடுத்து கொள்கை கூட்டணி என கூறி வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகள் தவெகவிற்கு பல்டி அடித்தது. இதனால் திமுக தனித்து விடப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் விலகிய தமாகா

இதே போல அதிமுகவும் தேர்தலில் தோல்வி அடைந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் உட்கட்சி மோதல் தலை தூக்கியுள்ள நிலையில் கொத்து கொத்தாக அதிமுக நிர்வாகிகள் தவெகவிற்கு பல்டி அடிக்கும் நிலையானது நீடித்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் என்டிஏ கூட்டணியில் இருந்து நட்பு கட்சியாகவே விலகுவதாக தெரிவித்துள்ள ஜி.கே.வாசன், த.மா.கா-வால் தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை, த.மா.கா பங்கேற்ற கூட்டணியும் வெற்றிப் பெறவில்லை, கட்சியை பலப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என தெரிவித்திருந்தார்.

திமுக கூட்டணியில் தமாகா

இந்த நிலையில் தமாகவின் அடுத்த பிளான் என விசாரித்ததில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் விலகும் போது திட்டமிட்டார். அந்த வகையில் திமுக எதிர்கட்சியாக இருந்த போது திமுக நடத்திய கூட்டத்தில் ஜி.கே.வாசன் பங்கேற்று அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவிற்கு எதிராக பல்வேறு தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனை அப்போது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் விரும்பவில்லை. ஜி.கே.வாசனை திமுக கூட்டணியில் சேர்க்க கூடாது என உறுதியாக தெரிவித்தது. இதனால் திமுக கூட்டணியில் தமாகவை இடம்பெறாத நிலையானது ஏற்பட்டது. வெறு வழியில்லாத காரணத்தால் அதிமுக, பாஜக என மாறி மாறி ஜி.கே.வாசன் கூட்டணி அமைத்தார்.

திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்க தமாகா திட்டம்.?

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இது தான் நல்ல சான்ஸ் என திட்டமிட்ட ஜி.கே.வாசன் அந்த இடத்தை பிடிக்க காய் நகர்த்தி வருகிறார். அந்த வகையில் விரைவில் திமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைய இருப்பதாக தமாகா வட்டார தகவலாக உள்ளது. எனவே விரைவில் வரவுள்ள இடைத்தேர்தலில் திமுக சார்பாக அறிவிக்கப்படவுள்ள வேட்பாளர்களுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவிப்பார் என கூறப்படுகிறது. அரசியலில் தினந்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது திமுக தலைமையில் புதிய கூட்டணிக்கான காய் நகர்த்தப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி