📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 06, 2026 10:03 PM

Gladiators Trailer

Gladiators Trailer

சென்னை: அஜித்குமார் இப்போது தனது கவனத்தை ரேஸிங் பக்கம் திருப்பியிருக்கிறார். இதற்காக ஏகே ரேஸிங் என்ற பெயரில் ஒரு டீமை உருவாக்கி உலகத்தின் பல நாடுகளுக்கு சென்று வெற்றிகளை குவித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க அவரது ரேஸிங் தொடர்பாக ஆவணப் படம் ஒன்று உருவாகியிருக்கிறது. கிளாடியேட்டர்ஸ் என்று அதற்கு பெயர் வைக்கப்பட்டிருக்கும் சூழலில்; அதன் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.

அஜித்துக்கு சிறு வயதிலிருந்தே கார் ரேஸ் மீது அலாதி பிரியம். சினிமாவில் நடிக்க வந்த பிறகு அவ்வப்போது போட்டிகளிலும் பங்கேற்றார். ஆனால் அதில் பெரிய வெற்றிகளை பெற முடியவில்லை. அதுமட்டுமின்றி விபத்துக்களையும் சந்திப்பது வழக்கமானது. இதனால் பாதி நாட்கள் மருத்துவமனையில் கழிக்கும் நிலைமைக்கு அவர் ஆளானார். இனிமேலும் இரண்டு விஷயங்களில் கவனத்தை செலுத்தினால் சினிமா நம்மை வெளியே அனுப்பிவிடும் என்ற முடிவில் ரேஸிங்கை மொத்தமாக ஒத்தி வைத்தார்.

மீண்டும் ரேஸ்: அதனையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அவர் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். இப்போது அவரது கவனம் கடந்த சில வருடங்களாக ரேஸிங் மீது அதிகம் இருக்கிறது. இந்த முறை தன்னுடைய திட்டங்கள், பாதைகள் அனைத்தையும் சரியாக வகுத்திருந்தார். ஏகே ரேஸிங் என்கிற பெயரில் ஒரு டீமையும் உருவாக்கி உலகம் முழுவதும் சென்று பந்தயங்களில் கலந்துகொள்கிறார். சினிமாவில் எப்படி தனது தடத்தை பதித்தாரோ அதே போன்று ரேஸிலும் பதித்துவருகிறார் என்பது மகிழ்ச்சியான ஒன்று.

பத்ம பூஷன் விருது: இதற்கிடையே ரேஸில் கலந்துகொண்டதை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது. அதை நினைத்து அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தார்கள். மேலும் ரேஸுக்காகத்தான் கடந்த ஒரே வருடத்தில் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து ஆச்சரியப்படுத்தினார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகவே ஏகே ஒரு வருடத்தில் இரண்டு பட ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டு; அதனை நல்லபடியாக முடித்து கொடுத்ததில்லை. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர்டெவில் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

கிளாடியேட்டர்ஸ் ஆவணப் படம்: இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் அவரது கார் ரேஸ் தொடர்பான ஆவணப் படத்துக்கு கிளாடியேட்டர்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதனை ஏ.எல்.விஜய் இயக்க; ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் இன்று அந்த ஆவண படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ட்ரெய்லர் வெளியானது: அறிவித்தபடி இன்று ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே அஜித்குமார் செம ஸ்டைலிஷாக நடந்து வந்து அமர்ந்து காஃபி சாப்பிடுகிறார். அதனையடுத்து கார் ரேஸ் தொடர்பான காட்சிகள் இடம்பெறுகின்றன. இதில் ஷாலினி, மகள் அனௌஷ்கா, மகன் ஆத்விக் உள்ளிட்டோரும் தோன்றுகிறார்கள். ஜிவி பிரகாஷின் பின்னணி இசை பட்டாசாக இருக்கிறது. முன்னதாக இந்த ட்ரெய்லரானது சத்யம், ரோகிணி உள்ளிட்ட தியேட்டர்களில் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.