📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 31, 2026 10:04 PM

ஹார்முஸ் ஜலசந்தி அருகே குண்டுகளை வீசிய அமெரிக்கா: 2 பேர் பலியானதாக ஈரான் அறிவிப்பு

ஹார்முஸ் ஜலசந்தி அருகே குண்டுகளை வீசிய அமெரிக்கா: 2 பேர் பலியானதாக ஈரான் அறிவிப்பு

டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, ஈரான் இடையே ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மீண்டும் தாக்குதல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. டெஹ்ரானில் இருந்து 1100 கிமீ தொலையில் உள்ள லாரக் தீவு பகுதியில் ஈரான் ராணுவத்தை நோக்கி அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தியது.

தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் ராணுவத்தினரா என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது.

லாரக் தீவு பகுதியில் கண்ணிவெடிகளை ஏவ ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை தயார் நிலையில் இருந்த போது இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக அமெரிக்கா பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.