📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 09, 2026 10:04 AM

Highest Paid PM: உலகின் அதிக சம்பளம் பெறும் பிரதமர் இவரா?.. மோடிக்கு எத்தனையாவது இடம்?

Highest Paid PM: உலகின் அதிக சம்பளம் பெறும் பிரதமர் இவரா?.. மோடிக்கு எத்தனையாவது இடம்?

Highest Paid PM: உலகின் அதிக சம்பளம் பெறும் பிரதமர் இவரா?.. மோடிக்கு எத்தனையாவது இடம்?

செல்வச் செழிப்புள்ள சிங்கப்பூர் அரசு சம்பளத்தை உயர்த்தியுள்ள நிலையில் அமைச்சரவை உறுப்பினர்களின் வருமானம் பெரும்பாலான சாதாரண குடிமக்களின் வருமானத்தை விட மிக அதிகமாக இருப்பதால் இந்த விவகாரம் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் அதிக சம்பளம் பெறும் பிரதமர் என்ற சிறப்பை சிங்கப்பூரைச் சேர்ந்த பிரதமர் லாரன்ஸ் வோங் பெற்றுள்ளார். அவரின் ஆண்டு வருமானம் ரூ.27 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆனால் இந்த சம்பளம் முழுவதும் பொருத்தமான நல்ல காரியங்களுக்கு நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரை நீண்டகாலமாக ஆளும் மக்கள் செயல் கட்சி (People's Action Party) சிங்கப்பூர் நாடாளுமன்றத்திலும், 21 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. சிங்கப்பூர் மக்கள் அவற்றை ஏன் கூர்ந்து ஆராய்கிறார்கள் என்பதையும், பலர் இந்த விஷயத்தில் ஏன் வலுவான உணர்வைக் கொண்டுள்ளனர் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். வரும் பத்தாண்டுகளில் நமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லத் தேவையான தரமான அரசியல் தலைமை தேவை எனவும் வோங் கூறியுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக அமைச்சர்களின் சம்பளத்தை மாற்றியமைத்த சிங்கப்பூர் அரசு தற்போதைய பதவிகளில் இருப்பவர்கள் உடனடியாக புதிய அளவுகோல்களுக்கு மாற்றப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.டாப் 10 வரிசையில் ஹாங்காங், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஆஸ்திரியா, கனடா, நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் சம்பள வரிசையில் அடுத்தடுத்து உள்ளனர். சம்பள வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பின்னரே வருகிறார். பிரதமரின் சம்பளம் மாதம் ஒன்றுக்கு ரூ.2.80 லட்சம், ஆண்டுக்கு ரூ.33,60,000 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி