📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news October 18, 2026 02:00 PM

இசையமைப்பாளர் தேவா உடல் அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம்

இசையமைப்பாளர் தேவா உடல் அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம்

-நமது நிருபர்-

இசையமைப்பாளர் தேவா, 75, சென்னையில் நேற்று திடீர் மாரடைப்பால் காலமானார். தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், கானா பாடல்களை திரைப்படங்களில் கொண்டு வந்தவருமான தேவா, 'தேனிசைத் தென்றல்' என, ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். தேவாவின் இறுதி சடங்கு, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சக்கரமல்லூரில் இன்று (அக்டோபர் 18) மாலை இசையமைப்பாளர் தேவா உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அங்கு அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

சென்னையில் இருந்து சக்கரமல்லூர் கிராமத்திற்கு தேவாவின் உடல் கொண்டு செல்லப்படுகிறது. உடல், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக சிறிது நேரம் வைக்கப்பட்டு, 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

தேவா உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி; இன்று மாலை இறுதிச்சடங்கு: தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்