📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News July 26, 2026 08:33 PM

ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைத்த டிரம்ப்: ஆயுத பற்றாக்குறை காரணமா

ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைத்த டிரம்ப்: ஆயுத பற்றாக்குறை காரணமா

வாஷிங்டன்: கடந்த 13 நாட்களாக தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அதனை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து கடந்த 13 நாட்களாக அந்நாடு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கத்தார், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஈரான் வீசி வந்தது.

13 நாட்களாக தொடர்ந்து மோதல் நடந்து வந்த நிலையில், இந்த தாக்குதலை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளார். புதிய தாக்குதல் நடத்தும் திட்டம் தயாரிக்கப்பட்ட போதிலும் நிறுத்திவைக்கும் முடிவை டிரம்ப் எடுத்துள்ளார்.

ராஜதந்திர ரீதியாக ஏற்பட்ட முன்னேற்றம், ஏவுகணை உள்ளிட்ட அமெரிக்க ஆயுதங்களின் கையிருப்பு குறைவு, பதற்றம் அதிகரித்தால் மோதல் விரிவடையும் அபாயம் ஆகியவை காரணமாக இந்த முடிவை டிரம்ப் எடுத்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.

வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் செங் கூறுகையில், டிரம்ப் தொடர்ந்து ஒரு ராஜதந்திர தீர்வையே ஆதரித்து வருகிறது. ஆனால், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியிலோ அல்லது அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிராக தாக்குதல் தொடர்ந்தால், ராணுவ நடவடிக்கைளை டிரம்ப் பரிசீலனை செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.