📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News July 21, 2026 05:33 PM

ஈரான் மீது தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அமெரிக்கா தாக்குதல்

ஈரான் மீது தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அமெரிக்கா தாக்குதல்

ஈரான் மீது தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அமெரிக்கா தாக்குதல்

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

மத்திய கிழக்கில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திங்களன்று அதிகாலை அமெரிக்கா ஈரான் மீது தொடர்ந்து ஒன்பதாவது இரவாக இராணுவத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்திய அண்மைய தாக்குதல்களில் கொல்லப்பட்ட மூன்று அமெரிக்க இராணுவ வீரர்களின் மரணத்திற்கு "மிகவும் கடுமையான" பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானைத் தாக்கியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் கூறியுள்ளார்.

யோர்தானில் உள்ள இராணுவ தளம் ஒன்றின் மீதான தாக்குதலில் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று வடக்கு ஈராக்கில் தாக்குதல் நடந்ததாகவும், இதில் மற்றொரு அமெரிக்க இராணுவ வீரர் இறந்துள்ளதாகவும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள், பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் தலைமையகமான பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தெஹ்ரானின் திறனைக் குறைக்கும் நோக்கில், அண்மையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் ஈரானின் இராணுவ நிலைகள் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது எதிர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், யோர்தானில் உள்ள அகாபா விமான நிலையத்தில் அமெரிக்க விமானங்களை குறிவைத்து தாக்கியதாகவும் ஈரான் இதற்கு பதிலளித்துள்ளது. தங்களது வான்வெளியில் நுழைந்த பல ஈரானிய ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்ததாக குவைத் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கத் தாக்குதல்களில் பல நகரங்கள் சேதமடைந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், மேலும் ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும்போது இரண்டு எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்ததாகவும் தெரிவித்துள்ளன. இந்த கப்பல்கள் ஆபத்தான கப்பல் போக்குவரத்து பாதையில் நுழைந்து வெடித்துச் சிதறியதாக ஈரானின் புரட்சிகர காவல்படை கூறியது.

இருப்பினும், கப்பல் தீப்பிடித்த சம்பவம் குறித்த ஈரானின் கூற்றை அமெரிக்க மத்திய கட்டளை மையம் மறுத்துள்ளதுடன், அந்த வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்த இருமுனைத் தாக்குதல்கள், மாநிலப் பாதுகாப்பு மற்றும் ஒரு மிகப்பெரிய அளவிலான போர் ஏற்படும் ஆபத்து குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளன.