📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 08, 2026 09:34 AM

இலங்கை டெஸ்ட் தொடரை ஜெயிக்கணும்னா இதை பண்ணுங்க.. இந்திய வீரர்களுக்கு அஜின்க்யா ரஹானே அறிவுரை

இலங்கை டெஸ்ட் தொடரை ஜெயிக்கணும்னா இதை பண்ணுங்க.. இந்திய வீரர்களுக்கு அஜின்க்யா ரஹானே அறிவுரை

இலங்கை டெஸ்ட் தொடரை ஜெயிக்கணும்னா இதை பண்ணுங்க.. இந்திய வீரர்களுக்கு அஜின்க்யா ரஹானே அறிவுரை

மும்பை: இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்பாக, சுப்மன் கில் தலைமையிலான இந்திய பேட்டர்களுக்கு முன்னாள் வீரர் அஜின்க்யா ரஹானே முக்கிய அறிவுரை ஒன்றை கூறி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ரஹானே, இலங்கையின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது எப்படி என இந்திய வீரர்களுக்கு ஆலோசனை அளித்துள்ளார். ரஹானே இலங்கையில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதங்களுடன் 407 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது அனுபவத்தை முன்வைத்து பேசிய ரஹானே, "இலங்கை ஆடுகளங்களில் முதல் நாளில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும். ஆனால் எதிரணி பந்துவீச்சாளர்களைத் தொடர்ந்து அழுத்தத்தில் வைப்பது மிக முக்கியம். இது தான் நான் இலங்கையில் கற்றுக் கொண்டது. அளவுக்கு அதிகமாக தடுப்பாட்டத்தில் ஈடுபடக் கூடாது. இலங்கை அணியிடம் நல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்துவது எளிதல்ல. அதனால் ஒவ்வொரு வீரரும் தனக்கென ஒரு தெளிவான திட்டத்தோடு விளையாட வேண்டும்" என்றார்.

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இந்திய அணிக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது. தற்போது அதற்கான புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள இந்தியா, எஞ்சியுள்ள 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சமீபகாலமாக நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா தொடர்களில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக இந்திய வீரர்கள் தடுமாறிய நிலையில், ரஹானேவின் இந்த அறிவுரை முக்கியமானதாக உள்ளது.

இதற்கிடையே கொழும்பில் நடைபெற்று வரும் பயிற்சிப் போட்டியின் முதல் நாளில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் விரல் காயம் காரணமாக ஓய்வில் இருந்ததால், கே.எல். ராகுல் அணியை வழிநடத்தினார். அடுத்து இந்திய வீரர்கள் பேட்டிங் செய்யும் போது தான் சுழற்பந்துவீச்சை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பது தெரிய வரும்.