📅 Saturday, 06 June 2026 IST | வைகாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports June 06, 2026 12:00 PM

IND vs AFG: யார் இந்த மானவ் சுதர்? 23 வயதில் கிடைத்த அறிமுகம்.. ஜடேஜா இடத்தை நிரப்புவாரா அஸ்வின் Fan

IND vs AFG: யார் இந்த மானவ் சுதர்? 23 வயதில் கிடைத்த அறிமுகம்.. ஜடேஜா இடத்தை நிரப்புவாரா அஸ்வின் Fan

IND vs AFG: யார் இந்த மானவ் சுதர்? 23 வயதில் கிடைத்த அறிமுகம்.. ஜடேஜா இடத்தை நிரப்புவாரா அஸ்வின் Fan

முல்லன்பூர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணிக்காக சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதர் அறிமுகமாகியுள்ளார். பல ஆண்டுகால கடும் பயிற்சியும் கடின உழைப்பும் இன்று கைகூடியது. போட்டியைத் தொடங்குவதற்கு முன்பாக நடந்த நிகழ்வில் இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், அவருக்கு இந்திய அணியின் டெஸ்ட் தொப்பியை வழங்கி கௌரவித்தார். அவரது கிரிக்கெட் பயணத்தின் முக்கியமான மைல்கல் இதுவாகும்.

23 வயதான மானவ் சுதர், இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் நம்பிக்கைக்குரிய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். பாரம்பரியமான இடது கை ஆர்த்தடாக்ஸ் சுழற்பந்து வீச்சாளராகவும், கீழ் வரிசையில் ரன்களை குவிக்கும் பேட்ஸ்மேனாகவும் செயல்படும் அவர், ராஜஸ்தான் அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் என்ற எல்லையோர நகரத்தில் இருந்து தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கி, தற்போது சர்வதேச அரங்கில் கால்பதித்துள்ளார். நீண்டகாலமாகவே இந்திய சிவப்பு பந்து கிரிக்கெட்டின் முக்கிய வளமாக சுதர் பார்க்கப்படுகிறார். ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், அணியின் அடுத்தகட்ட சுழற்பந்து வீச்சு திறமைகளைக் கண்டறியும் வாய்ப்பாக இந்த அறிமுகம் அமைகிறது.

கடந்த 2022-23 ரஞ்சிக்கோப்பை சீசனில் ராஜஸ்தான் அணிக்காக மிகச்சிறப்பாக பந்துவீசி, 6 போட்டிகளில் 39 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதுவரை 29 முதல் தர போட்டிகளில் இவர் 129 விக்கெட்டுகளையும், 945 ரன்களையும் பதிவு செய்துள்ளார்.இந்தியா ஏ அணிக்காக இவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக 107 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்தியது உட்பட, தொடர் முழுவதும் விக்கெட்டுகளைக் குவித்து அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும், 2023 ACC எமர்ஜிங் டீம்ஸ் ஆசிய கோப்பை தொடரிலும் தனது திறமையை நிரூபித்தார். இந்த சிறப்பான ஆட்டத்திறன் தான் அவரை தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு உயர்த்தியுள்ளது.

முல்லன்பூரில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷுப்மன் கில், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கே.எல். ராகுல், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ஷுப்மன் கில், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், மானவ் சுதர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா உள்ளனர். அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியை ஹஷ்மத்துல்லா ஷாஹிதி வழிநடத்துகிறார்.