📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports June 17, 2026 04:30 PM

IND vs AFG: சுப்மன் கில் 9வது சதம் விளாசி அபாரம்.. அதிவேக சதம் விளாசிய 4வது இந்திய கேப்டன் என பெருமை

IND vs AFG: சுப்மன் கில் 9வது சதம் விளாசி அபாரம்.. அதிவேக சதம் விளாசிய 4வது இந்திய கேப்டன் என பெருமை

IND vs AFG: சுப்மன் கில் 9வது சதம் விளாசி அபாரம்.. அதிவேக சதம் விளாசிய 4வது இந்திய கேப்டன் என பெருமை

லக்னோ: இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், ரசிகர்களால் அன்போடு 'பிரின்ஸ்' (Prince) என்று அழைக்கப்படுபவருமான சுப்மன் கில், இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 9-வது சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.

லக்னோவில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. தொடக்க வீரராக எப்போதும் களம் இறங்கும் சுப்மன் கில், இன்றைய ஆட்டத்தில் 3வது வீரராக விளையாடினார். ஆரம்பத்தில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தார். ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் ஸ்விங் பந்துகளைத் தற்காப்பு ஆட்டத்தின் மூலம் எதிர்கொண்ட அவர், நிலைத்து நின்ற பிறகு தனது அதிரடியைத் தொடங்கினார்.

ஆட்டத்தின் 10-வது ஓவருக்குப் பிறகு கில்லின் பேட்டில் இருந்து பவுண்டரிகள் பறக்கத் தொடங்கின. குறிப்பாக, ஆஃப் சைடு திசையில் அவர் அடித்த 'கவர் டிரைவ்' (Cover Drive) ஷாட்கள் மைதானத்தில் இருந்த ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தின.

சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்த கில்

ஆப்கானிஸ்தான் அணியின் பலமே அதன் சுழற்பந்து வீச்சுதான். ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் போன்ற உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் சவாலான காரியம். ஆனால், இன்றைய போட்டியில் சுப்மன் கில் அந்தச் சவாலை மிக எளிதாகக் கையாண்டார்.

ரஷித் கானின் கூக்ளி பந்துகளைக் கணித்து அவர் அடித்த சிக்ஸர்கள், கில்லின் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தின. 38 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்த அவர், தொடர்ந்து அதிரடி காட்டினார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகத் தனது கால்களைச் சரியாகப் பயன்படுத்தி (Footwork), மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ரன்களைக் குவித்தார்.

9-வது சதம்: ஒரு புதிய மைல்கல்

90 ரன்களை கடந்த உடன் கில் சதத்தை தொடுவதற்காக கொஞ்சம் பொறுமை காக்க, அந்த நேரத்தில் இசான் கிஷன் ருத்ரதாண்டவம் ஆடினார். இந்த சூழலில் 77 பந்துகளில் சுப்மன் கில் தனது குறுகிய கால கிரிக்கெட் வாழ்க்கையில் 9-வது சதத்தை எட்டினார். விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் மிக வேகமாகச் சதங்களை அடிக்கும் வீரராக கில் உருவெடுத்துள்ளார்.

இன்றைய சதத்தின் மூலம், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலிலும் அவர் முன்னிலை பெற்றுள்ளார். தனது 26 வயதில் சுப்மன் கில் ஒட்டுமொத்தமாக 21 சர்வதேச சதம் அடித்துள்ளார். இதே போன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த 4வது இந்திய கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முதலிடத்தில் ரோகித் சர்மா 63 பந்துகளில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 2023 உலககோப்பையில் அதிவேகம் சதம் அடித்தார். கில்லுக்கு முன்னதாக ரோகித் (2 முறை), சேவாக் மற்றும் கோலி ஆகியோர் உள்ளனர்.