📅 Saturday, 06 June 2026 IST | வைகாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports June 06, 2026 02:30 PM

IND vs AFG ODI: விராட் கோலி ஒருநாள் அணியில் இல்லை.. மாற்று வீரராக அதிரடி பேட்டருக்கு வாய்ப்பு

IND vs AFG ODI: விராட் கோலி ஒருநாள் அணியில் இல்லை.. மாற்று வீரராக அதிரடி பேட்டருக்கு வாய்ப்பு

IND vs AFG ODI: விராட் கோலி ஒருநாள் அணியில் இல்லை.. மாற்று வீரராக அதிரடி பேட்டருக்கு வாய்ப்பு

மும்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதியில் தொடங்கவுள்ள இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில், நட்சத்திர பேட்டர் விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் 2026 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியபோது விராட் கோலிக்கு தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டது. காயத்தின் தன்மை காரணமாக அவர் தற்போதைய தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட அணியில் விராட் கோலி இடம் பெற்றிருந்த நிலையில், வீரர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு அணியில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ரோகித் சர்மா காயம் காரணமாக பங்கேற்பாரா என்று சந்தேகம் எழுந்த நிலையில், அவர் இந்த தொடரில் மாற்றுப்படவில்லை.

இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இதுவரை 4 சர்வதேச ஒருநாள் (ODI) போட்டிகளில் விளையாடி 4 இன்னிங்ஸ்களில் 171 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவரது பேட்டிங் சராசரி 57.00 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 86.80 ஆகவும் உள்ளது. கடந்த டிசம்பர் 2025-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 121 பந்துகளில் 116* ரன்கள் விளாசி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதலாவது அதிரடி சதத்தைப் பதிவு செய்தார்.

இதுவே ஒருநாள் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ஸ்கோராகும். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இப்போதே தடம் பதிக்கத் தொடங்கியுள்ள ஜெய்ஸ்வால், முன்னதாக உள்நாட்டு லிஸ்ட்-ஏ (List A) கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி, மிக இளம் வயதிலேயே (17 வயதில்) இரட்டைச் சதம் (203 ரன்கள்) அடித்த வீரர் என்ற அசாத்திய சாதனையைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடருக்கான திருத்தப்பட்ட இந்திய ஒருநாள் அணி விவரம்: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர் (துணைக் கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.