📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 04, 2026 11:00 PM

IND vs ENG: அக்சர் பட்டேல் மாபெரும் சாதனை.. மான்செஸ்டர் மண்ணில் சம்பவம் செய்த குஜராத் பாபு

IND vs ENG: அக்சர் பட்டேல் மாபெரும் சாதனை.. மான்செஸ்டர் மண்ணில் சம்பவம் செய்த குஜராத் பாபு

IND vs ENG: அக்சர் பட்டேல் மாபெரும் சாதனை.. மான்செஸ்டர் மண்ணில் சம்பவம் செய்த குஜராத் பாபு

மான்செஸ்டர்: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சரித்திர சாதனையை அக்சர் படேல் படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது, மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் இந்த அசத்தலான மைல்கல்லை அவர் எட்டினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை அவர் ஆழமாகப் பதித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில், அதிரடி பேட்ஸ்மேனும் கேப்டனுமான ஹாரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அக்சர் படேல் தனது 100-வது சர்வதேச டி20 விக்கெட்டைப் பதிவு செய்தார். மிக முக்கியமான கட்டத்தில் வீசப்பட்ட அந்தப் பந்தில் ஹாரி புரூக் ஆட்டமிழக்க, ஒட்டுமொத்த மைதானமும் அக்சர் படேலின் சாதனைக் கொண்டாட்டத்தில் மூழ்கியது.

இதன் மூலம் சர்வதேச டி20 அரங்கில் 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய ஸ்பின்னர் என்ற பெருமையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார். அக்சர் படேலின் இந்த சாதனையை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குஜராத் பாபு என வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். மகாத்கமா காந்தி குஜராத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை பாபு என்று அழைப்பது போல், அதே குஜராத்தை சேர்ந்த அக்சர் பட்டேலையும் ரசிகர்கள் பாபு என்று அழைப்பார்கள்.

தனது துல்லியமான லைன் மற்றும் லென்த் மூலம் பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கும் அக்சர் படேல், மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில் அழுத்தமான சூழ்நிலையிலும் சிறப்பாகச் செயல்பட்டு இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அப்போது ஆர்ஸ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது. நெருக்கடியான கட்டத்தில் களமிறங்கிய ஹாரி புரூக் கவுண்டர் அட்டாக்கிங் இன்னிங்ஸ் விளையாடி இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். 15 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த அவர் 3 சிக்சர், 4 பவுண்டரிகளை விளாசி அபாயகரமாக விளங்கிய நிலையில் இசான் கிசன் ஆட்டமிழந்தார்.