📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports June 29, 2026 07:30 AM

IND vs IRE: இது தேவையா.. ரிஷப் பண்ட்டுடன் இணைந்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.. படுமோசமான சாதனை

IND vs IRE: இது தேவையா.. ரிஷப் பண்ட்டுடன் இணைந்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.. படுமோசமான சாதனை

IND vs IRE: இது தேவையா.. ரிஷப் பண்ட்டுடன் இணைந்தார் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.. படுமோசமான சாதனை

பெல்பாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்ததை அடுத்து, கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய இரண்டாவது இந்திய கேப்டன் என்ற தேவையற்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார்.

அயர்லாந்தில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு மும்பையைச் சேர்ந்த 31 வயதான வலதுகை பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஜூன் 26 அன்று பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற முதல் போட்டியில் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இது சர்வதேச கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற முதல் தோல்வியாகும்.

தொடர்ந்து, ஜூன் 28 அன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது. இதன் மூலம் அயர்லாந்துக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை இழந்ததுடன், இந்தியாவின் 16 தொடர்ச்சியான டி20 தொடர் வெற்றிப் பயணமும் முடிவுக்கு வந்தது.

இந்த அடுத்தடுத்த தோல்விகளால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக களமிறங்கிய முதல் 2 டி20 போட்டிகளிலும் தோல்வியடைந்த இரண்டாவது கேப்டன் என்ற தேவையற்ற பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்துள்ளார். இதற்கு முன், 2022 ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ரிஷப் பண்ட் தனது முதல் 2 போட்டிகளில் கேப்டனாக தோல்வியடைந்தார்.

ஐபிஎல் தொடரில் 3 வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு வழிநடத்திய ஒரே கேப்டன் என்ற பெருமைக்குரிய ஸ்ரேயாஸ் ஐயர், இத்தொடரில் பேட்டிங்கிலும் ஏமாற்றமளித்தார். முதல் போட்டியில் 7 பந்துகளில் 3 ரன்களும், இரண்டாவது போட்டியில் நான்காவது வீரராக களம் இறங்கி 7 பந்துகளில் 10 ரன்களும் மட்டுமே எடுத்தார்.

அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஜூலை 1 அன்று செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் தொடங்கும் டி20 தொடரை ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்தவுள்ளார். ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் கேப்டனாக செயல்படவுள்ளார்.

இங்கிலாந்து தொடருக்கான அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றும், அயர்லாந்து தொடரில் இடம்பெற்ற அதே வீரர்களே இதிலும் தொடர்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.