📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka July 28, 2026 10:33 AM

IND vs SL: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு.. இலங்கை தொடரில் 33 வயது வீரருக்கு ஜாக்பாட் வாய்ப்பு

IND vs SL: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு.. இலங்கை தொடரில் 33 வயது வீரருக்கு ஜாக்பாட் வாய்ப்பு

IND vs SL: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு.. இலங்கை தொடரில் 33 வயது வீரருக்கு ஜாக்பாட் வாய்ப்பு

மும்பை: இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த டெஸ்ட் அணியில் சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல்.ராகுல் துணை கேப்டனாகவும் தொடர்கின்றனர். இந்த அணித் தேர்வில் யாரும் எதிர்பாராத வகையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் சரன்ஷ் ஜெயின் முதன்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் 2014-15 முதல் விளையாடி வரும் இவர், சமீபத்தில் நடைபெற்ற இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான 2வது போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்து அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே, ஆஃப்-ஸ்பின் மற்றும் பேட்டிங் செய்யக்கூடிய சரன்ஷ் ஜெயினுக்கு இந்த ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது.

காயத்தில் இருந்து மீண்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவர்கள் விளையாடுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பிசிசிஐ அகாடமியின் உடற்தகுதிச் சான்றிதழைப் பொறுத்தே அவர்கள் இருவரும் போட்டியில் ஆடுவார்களா, இல்லையாஎன்பது முடிவு செய்யப்படும்.

நீண்ட இடைவெளிக்கு பின் ரவீந்திர ஜடேஜா இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர் மற்றும் சரன்ஷ் ஜெயின் என 4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சுப் பிரிவில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார் ஆகியோர் உள்ளனர். இந்தத் தொடருக்கு முன்னதாக, இந்திய அணி ஆகஸ்ட் 7 முதல் கொழும்பில் 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய டெஸ்ட் அணி: சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரன்ஷ் ஜெயின்.