📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 14, 2026 10:03 AM

IND vs SL: காலேவில் கம்பீர் போடப்போகும் பெரிய ஸ்பின் வியூகம்.. அதுக்குனு 4 ஸ்பின்னர்களா?

IND vs SL: காலேவில் கம்பீர் போடப்போகும் பெரிய ஸ்பின் வியூகம்.. அதுக்குனு 4 ஸ்பின்னர்களா?

IND vs SL: காலேவில் கம்பீர் போடப்போகும் பெரிய ஸ்பின் வியூகம்.. அதுக்குனு 4 ஸ்பின்னர்களா?

காலே: இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலேவில் தொடங்குகிறது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இலங்கையில் டெஸ்ட் போட்டி ஒன்று விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல வேண்டும் என்றால் இலங்கை தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.

இந்த சூழலில் இலங்கை ஆடுகளம் எப்போதுமே சுழற் பந்துவீச்சுக்கு ஒரு அளவுக்கு சாதகமாக இருக்கும். இதனால் கம்பீர் 4 சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள். இந்த நான்கு ஸ்பின்னர்களில் மூன்று பேர் ஆல் ரவுண்டர்கள் என்பதால் அணியின் பேட்டிங் பாதிக்காத வகையில் இப்படி ஒரு முடிவை கம்பீர் எடுக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்தியாவில் தற்போது நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இந்த நான்கு பேருமே பிளேயிங் லெவனுக்குள் வர வாய்ப்புள்ளது. அதன்படி ஜடேஜா, மானவ் சுதர் மற்றும் சரண்ஸ் ஜெயின் ஆகியோர் அணிக்குள் வரலாம். நான்காவது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் இடம்பெறலாம். மேலும் இரண்டு வேகப்பந்துவீச்சாளராக சிராஜ் மற்றும் கிருஷ்ணா அல்லது சிராஜ் மற்றும் குர்னூர் பிராரை கம்பீர் சேர்க்கலாம்.

ஐந்து பேட்ஸ்மேன்களாக ஜெய்ஸ்வால், ராகுல், ரிஷப் பண்ட் மற்றும் தேவுதத் படிக்கல் ஆகியோரை கம்பீர் தேர்வு செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனினும் நான்கு சுழற் பந்துவீச்சாளர் என்பது இலங்கையில் தேவையற்ற ஒன்று என்ற கருத்தும் எழுதுகிறது.

நான்கு ஸ்பின்னர்களை பயன்படுத்தும் போது ஏதேனும் இரண்டு ஸ்பின்னர்கள் குறைந்த அளவிலே ஓவர்கள் வீசக்கூடும் என்பதால் அதற்கு பதிலாக சர்ஃப்ராஸ்கான் அல்லது துருவ் ஜூரல் போன்ற பேட்டர்களை பயன்படுத்தலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

33 வயதான சரண்ஸ் ஜெயின் முதல்முறையாக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் பேட்டிங்கில் பயிற்சி ஆட்டத்தில் நன்றாக விளையாடினாலும், பந்துவீச்சு விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இதனால் நடுவரிசையில் இவரை ஒரு பேட்டராக பயன்படுத்தி குறைந்தபட்சம் ஐந்து அல்லது ஆறு ஓவர்களை வீச வைக்கலாம் என்ற முடிவில் இந்திய அணி நிர்வாகம் இருக்கிறது.