📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 17, 2026 11:02 AM

IND vs SL: முதல் இன்னிங்ஸில் மெகா ஸ்கோர் எடுத்த இந்தியா.. முதல் ஓவரிலேயே இலங்கைக்கு அதிர்ச்சி

IND vs SL: முதல் இன்னிங்ஸில் மெகா ஸ்கோர் எடுத்த இந்தியா.. முதல் ஓவரிலேயே இலங்கைக்கு அதிர்ச்சி

IND vs SL: முதல் இன்னிங்ஸில் மெகா ஸ்கோர் எடுத்த இந்தியா.. முதல் ஓவரிலேயே இலங்கைக்கு அதிர்ச்சி

காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்கள் குவித்தது. இளம் வீரர் தேவ்தத் படிக்கலின் அபார சதம், கே.எல். ராகுல் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரின் அரைசதங்கள் மூலம் இந்திய அணி வலுவான ஸ்கோரை எடுத்தது.

காலே சர்வதேச மைதானத்தில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ரன்களில் ரன் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் மற்றும் கே.எல். ராகுல் ஜோடி இலங்கை பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டது. அபாரமாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 230 பந்துகளில் 15 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 167 ரன்கள் குவித்து ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நங்கூரமாக நின்ற கே.எல். ராகுல் 82 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தது.

கேப்டன் சுப்மன் கில் 16 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் 39 ரன்களும், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் 51 ரன்களும் எடுத்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 13 ரன்களும், மானவ் சுதார் 24 ரன்களும், முகமது சிராஜ் 11 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 116.4 ஓவர்களில் 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குல்தீப் யாதவ் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளையும், கேஷர நுவன்தா 3 விக்கெட்டுகளையும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே இலங்கை அணி தனது முதல் விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனால் இந்திய அணி இப்போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.