📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 24, 2026 03:03 PM

IND vs SL: ரிஷப் பண்ட் மைதானத்திற்கு வெளியே சிக்சர் அடித்து அபாரம்.. தொடர்ந்து 2வது முறை

IND vs SL: ரிஷப் பண்ட் மைதானத்திற்கு வெளியே சிக்சர் அடித்து அபாரம்.. தொடர்ந்து 2வது முறை

IND vs SL: ரிஷப் பண்ட் மைதானத்திற்கு வெளியே சிக்சர் அடித்து அபாரம்.. தொடர்ந்து 2வது முறை

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளன்று, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் அடித்த சிக்சர் மூலம் மைதானத்திற்கு வெளியே பந்து பறந்து சென்றது. முதல் நாள் ஆட்டத்தின் போது லஹிரு குமார வீசிய அதிவேக ஷார்ட் டெலிவரி பந்து, 28 வயதான ரிஷப் பந்தின் இடது மணிக்கட்டில் பலமாகத் தாக்கியது.

இதனால் அவர் 3 ரன்களுடன் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி மைதானத்தை விட்டு வெளியேறினார். இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்க பகுதியில், சரண்ஷ் ஜெயின் ஆட்டமிழந்த பிறகு பந்த் மீண்டும் களம் புகுந்தார். அப்போது லஹிரு குமார மீண்டும் ஒரு ஷார்ட் டெலிவரி மூலம் பந்தை வீசினார். ஆனால், இந்த முறை அதனைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட பந்த், ஃபைன் லெக் திசையில் ஒரு பிரம்மாண்டமான சிக்ஸரை விளாசினார்.

பந்தின் இந்த அசாத்தியமான ஷாட், கொழும்பு மைதானத்தின் கூரையைத் தாக்கி மைதானத்திற்கு வெளியே சென்றது. இதனால் நான்காவது நடுவர் புதிய பந்துகள் அடங்கிய பெட்டியைக் களத்திற்குள் கொண்டுவர வேண்டியதாயிற்று.காலே மைதானத்தில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்தப் போட்டியிலும் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். முதல் இன்னிங்ஸில் 39 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 69 பந்துகளில் 66 ரன்களும் எடுத்து இந்திய அணி ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர் உதவினார். அப்போதும் அவர் அடித்த சிக்சர் ஒன்று மைதானத்தை விட்டு வெளியே சென்றது.

கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இரு அணிகளுமே சமபலத்துடன் போராடின. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 85 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்திருந்தது. எனினும், இரண்டாம் நாள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே இலங்கை அணியின் அசிதா பெர்னாண்டோ விக்கெட் வீழ்த்தியதால், இந்தியா 307 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்தத் தருணத்தில் ரிஷப் பந்த் மீண்டும் களம் திரும்பினார்.

இந்த இன்னிங்ஸின் போது, வெளிநாட்டு மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர்களின் வரிசையில் தோனியை முந்தி ரிஷப் பந்த் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.