IND vs SL: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதே எங்கள் இலக்கு.. கில் கருத்து
IND vs SL: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதே எங்கள் இலக்கு.. கில் கருத்து
காலே: இலங்கை மற்றும் இந்தியா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு நாளை சனிக்கிழமை தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்தியாவின் பயணம் வரலாற்று சிறப்புமிக்க காலே நகரத்திலிருந்து இறுதி கட்டத்தை எட்டுகிறது.
இறுதிப்போட்டிக்கான இடத்தை உறுதி செய்ய அடுத்த ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஏழில் வெற்றி பெற வேண்டும். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதே எங்களின் முக்கிய இலக்காகும். எங்களிடம் இன்னும் ஒன்பது டெஸ்ட் போட்டிகள் உள்ளன."
"இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான நல்ல வாய்ப்பைப் பெற நாம் ஆறு அல்லது ஏழு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வகையில், இந்தத் தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது" என்று கில் கூறினார்.
"ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய நான்கு நாட்களுக்குள் டெஸ்ட் போட்டியில் விளையாடினோம். எனவே, வீரர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வது எளிதல்ல. இந்த அணியில் உள்ள பெரும்பாலான வீரர்களுக்கு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. மேலும், பல வீரர்களுக்குப் போதிய அனுபவமோ அல்லது அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவமோ இல்லை. எனவே, தயாரிப்புக்கான கூடுதல் நேரம் நிச்சயமாக உதவுகிறது" என்றும் கில் கூறினார்.
"மானவ் சுதரிடம் பேட்டிங் செய்யும் திறன் உள்ளது. அவரால் பேட்டிங் செய்ய முடியும் என்பது நமக்குத் தெரியும். நிச்சயமாக, அதற்கு கொஞ்சம் அனுபவமும், நம்பிக்கையும் தேவை. நீங்கள் மைதானத்தில் இறங்கி விளையாடி, சில ரன்களை எடுக்கும்போது மட்டுமே அது கிடைக்கும். இந்தத் தொடரில் அவர் அதைச் செய்வார் என்று நம்புகிறோம். பந்துவீச்சில் சிறந்த திறமை கொண்ட அவர், 8-வது வரிசையில் களம் இறங்கக்கூடிய ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுக்கும் திறனையும் பெற்றுள்ளார்" என்று கில் கூறினார்.
"பிரார், பிரசித் என இருவரும் மிகவும் திறமையான பந்துவீச்சாளர்கள், பயிற்சிப் போட்டியிலும் சிறப்பாக பந்துவீசினர். ஆட்டத்தில் எதுவும் சாதகமாக இல்லாதபோது, பழைய பந்தில் குர்னூர் எவ்வளவு சிறப்பாக பந்துவீசுவார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதற்கு கூடுதல் வேகமும் கூடுதல் பவுன்ஸும் தேவை. அவர் மிகவும் உயரமானவர் என்பதும் ஒரு சாதகம். ஆனால், பிரசித் சமீபகாலமாக நான் பார்த்ததிலேயே மிகச்சிறப்பாக பந்துவீசி வருகிறார். சிவப்பு பந்து மற்றும் வெள்ளை பந்து கிரிக்கெட் இரண்டிலும் அவர் அசத்துகிறார். எனவே இவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது எங்களுக்கு மிகவும் கடினமான முடிவாக இருக்கும்" என்று கில் கூறினார்.