📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 23, 2026 06:09 PM

IND vs ZIM: யோ! என்ன மாதிரி பவுலிங் யா இது? டிராகன் போல் நெருப்பை கக்கிய மாயங் யாதவ்

IND vs ZIM: யோ! என்ன மாதிரி பவுலிங் யா இது? டிராகன் போல் நெருப்பை கக்கிய மாயங் யாதவ்

IND vs ZIM: யோ! என்ன மாதிரி பவுலிங் யா இது? டிராகன் போல் நெருப்பை கக்கிய மாயங் யாதவ்

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான மாயங் யாதவ் அபாரமாக பந்து வீசி ரசிகர்களின் கவனத்தை முதல் ஓவரிலே ஈர்த்தார். ஐபிஎல் தொடரில் மணிக்கு 157 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி ஒட்டுமொத்த கிரிக்கெட் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தவர் மாயங் யாதவ்.

இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டார். இந்திய அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் விளையாடி நான்கு விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தி இருக்கிறார். எனினும் கடைசியாக அவர் வங்கதேசத்துக்கு எதிராக அக்டோபர் மாதம் டி20 போட்டியில் விளையாடினார்.

அதன் பிறகு ஏற்பட்ட காயம் காரணமாக பெருமளவு கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக வெறும் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் நடந்து முடிந்த சீசனில் நான்கு போட்டிகளில் களம் இறங்கினார். இந்த நிலையில் தற்போது தனது உடல் தகுதியை மீட்டுள்ள மாயங் யாதவ், ஜிம்பாப்வே எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பினார்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக டி20 உலக கோப்பை தொடரில் பென்னெட் அதிரடியாக விளையாடி 97 ரன்கள் குவித்து இருந்தார். இந்த சூழலில் முதல் டி20 போட்டியில் மாயங் யாதவ் ஆட்டத்தின் முதல் பந்திலே, அவருடைய விக்கெட்டை எடுத்தார். விக்கெட் எடுத்த அந்த பந்தை அவர் மணிக்கு 144 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார்.

இதேபோன்று ஆட்டத்தின் இரண்டாவது பந்தை மணிக்கு 149 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். எப்போதுமே 150 km மேல் வீசக்கூடிய பவுலராக மாயங் யாதவ் இருந்தார். ஆனால் காயம் காரணமாக தனது பந்துவீச்சு முறையில் கொஞ்சம் மாற்றி இருப்பதால் அவருடைய வேகம் கொஞ்சம் குறைவாக இருந்தது.

எனினும் ஆட்டத்தின் முதல் ஓவரில் மாயங் யாதவ் வீசிய பந்தை ஜிம்பாப்வே வீரர்களால் தொடக் கூட முடியவில்லை. டிராகன் நெருப்பை கக்குவது போல் அவர் வீசிய பந்துகளில் அனல் பறந்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விக்கெட் கிடைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வீசப்படும் லென்த்துக்கள் போல் அவர் வீசிய பந்தால் ஸ்லிப்பில் கேட்ச் பறந்தது. இதனால் அவருக்காக கூடுதல் சிலிப் பில்டர்களை ஸ்ரேயாஸ் நிற்க வைத்தார்.