Independence Day 2026 wishes: குடும்பத்தினர், நண்பர்களுக்கு அனுப்ப அழகான சுதந்திர தின வாழ்த்துகள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், ஸ்பெஷல் மெசேஜ்
சுதந்திர காற்றின் பெருமையை உணர்ந்து, தேசத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து உழைப்போம். அனைவருக்கும் 80-வது சுதந்திர தின வாழ்த்துகள்! பல தியாகிகளின் ரத்தத்தால் சிவந்த இந்த திருநாளில், நம் நாட்டின் பெருமையை காப்போம் என உறுதி ஏற்போம். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! ஜாதி, மத வேறுமைகளை கடந்து நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றை அடையாளத்துடன் சுதந்திர திருநாளை கொண்டாடுவோம்! Happy Independence day நமது மூவர்ண கொடி நமக்கு சுதந்திரத்தை மட்டுமல்ல, தேசத்தின் உழைப்பையும் தியாகத்தையும் நினைவூட்டுகிறது. இனிய சுதந்திர தின வாழ்த்துகள்! வீரம் விளைந்த நமது மண்ணில் அமைதியும் வளர்ச்சியும் என்றென்றும் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! நாட்டை நேசிப்போம், மனிதர்களை மதிப்போம். ஒற்றுமையும் மனிதநேயமும் நிறைந்த நல்ல இந்தியர்களாக வாழ்வோம். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். நம் நாட்டின் கலாச்சாரத்தையும் ஒற்றுமையையும் காத்து, எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த இந்தியாவை பரிசளிப்போம். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்! நம் தேசத்தின் பெருமை உலகம் முழுவதும் ஒளிரட்டும்; உங்கள் வாழ்க்கையும் மகிழ்ச்சியால் நிரம்பட்டும். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்! நம் மூவர்ண கொடி என்றும் உயர்ந்து பறக்கட்டும்; அதுபோல் உங்கள் வாழ்க்கையும் சாதனை, மகிழ்ச்சி, வெற்றிகளால் உயரத்தை அடையட்டும். Happy Independence day 2026! சுதந்திரம் பரிசல்ல, பல தியாகங்களின் பலன்! அதைக் காப்போம் என்று இந்நாளில் உறுதியேற்போம். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!"