இங்கிலீஷில் கேள்வி கேட்டு வெளுத்த கார்த்திக்.. அலறியடித்து ஓடிய மாயா.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் ஸ்வாதியின் காதலன் தினேஷ் கார்த்திக்குடன் போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது, அவனை சிவனாண்டியின் ஆட்கள் கடத்தி விடுகின்றனர். இந்த விஷயம் தெரிந்த கார்த்திக் தினேசை யார் கடத்தி இருப்பார்கள் என சந்தேகப்படுகிறார். மேலும், இந்த விஷயத்தை மயில்வாகனத்திடம் சொல்கிறார்.
கார்த்திகை தீபம்: இதையடுத்து மறுநாள், சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு சந்திரகலா ஏற்பாடு செய்த போலி தினேஷ் வீட்டுக்கு வருகிறார். இதைப்பார்த்து சந்தேகப்படும் மயில்வாகனம் கார்த்திக்கிற்கு போன் செய்து, சகல நீ நேத்து காணாமல் போனதாக சொன்ன தினேஷ் வீட்டுக்கு வந்து ஸ்வாதியை பெண் பார்த்துக்கொண்டு இருப்பதாக சொல்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் கார்த்திக், அது எப்படி நடக்கும் அவன் நேற்று பேசும் போது அக்கா ஊரில் இருந்து வரவில்லை என்று தான் சொன்னார் என்று சொல்கிறார். இதையடுத்து,அவர்கள் மீது சந்தேகம் உருவான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்திக்கிற்கு வந்த சந்தேகம்: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், கார்த்திக் மகேஷ் மாயாவை தேடி வர இருவரும் வெளிநாட்டு பயணிகள் குறித்து விசாரிப்பதற்காக அலுவலகத்திற்கு சென்று இருப்பதாக சொல்ல சொல்லி கிளம்பிச் சென்று விடுகின்றனர். மறுபக்கம் போட்டோகிராபர் போட்டோக்களை ஆராயும்போது அதில் சிவனாண்டி கற்பகத்தை கொலை செய்த வீடியோ ஆதாரம் இருக்க அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கேமரா மேன் ஸ்டூடியோ ஓனரிடம் காட்டுகிறார். அதைப்பார்த்த ஓனர், இதை வெளியில் காட்டினால் நமக்கு தான் பிரச்சனை அதனை டெலிட் செய்து விடுகின்கிறார். ஆனால்,கேமராமேன் இது ஏதோ தப்பாக இருக்கிறது என யோசித்து அதை சேவ் செய்து வைக்கிறார்.
நடக்கப்போவது என்ன: அடுத்ததாக கார்த்திக் வீட்டுக்கு வர மகேஷ் மாயா ஓடி ஒளிந்து கொள்கின்றனர். இந்த விஷயத்தை பார்த்த மயில்வாகனம் ரூமுக்குள் பாம்பு இருப்பதாக சொல்லி ஒரு கயிரை தூக்கி வீச இருவரும் பயந்து போய் வெளியே ஓடி வருகின்றனர். நேராக கார்த்தியிடம் சிக்கிக் கொள்ள கார்த்திக்கு இவர்களை நிற்க வைத்து ஆங்கிலத்தில் நான் கேள்விகளை கேட்க இருவரும் பதில் சொல்ல முடியாமல் திணறுகின்றனர். இருப்பினும் கார்த்திக் பேரையும் வெளிக்காட்டி கொள்ளாமல் சரி ஓகே என்று இவர்களிடம் அறிமுகமாகி கொண்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.