📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 12, 2026 03:04 PM

200 அதிகாரிகள் அரசு தகவல்களை எங்களுக்கு கொடுக்கிறார்கள்; சொல்கிறார் ராகுல்

200 அதிகாரிகள் அரசு தகவல்களை எங்களுக்கு கொடுக்கிறார்கள்; சொல்கிறார் ராகுல்

புதுடில்லி: டில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது; டில்லி பாராகம்பா சந்திப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தை பிற்பகலில் இண்டி கூட்டணி தலைவர்கள் பிரம்மாண்ட பேரணி நடத்துகிறோம். இது அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான போராட்டம். ராகுலுக்கோ, மோடிக்கானதோ அல்ல. பாஜவைச் சேர்ந்தவர்கள் உட்பட அரசியலமைப்பைப் பாதுகாக்க விரும்பும் யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்கலாம். பிற்பகல் 3 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுக்க உள்ளோம்.

மோடி அரசில் இடம்பெற்றுள்ள 200 அதிகாரிகள் எதிர்க்கட்சியினருக்கு அரசு தகவல்களை கொடுக்கின்றனர். இதில், அமலாக்கத்துறை, சிபிஐ, வெளியுறவுத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

தேர்தலில் ஊழல் நடக்கவில்லை என்பதை நிருபிக்குமாறு எதிர்க்கட்சிகள் கேட்பதாலேயே, ஒட்டுமொத்த டில்லியையும் பிரதமர் மோடி முடக்கியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் தேர்தல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களை கேட்டனர். நாங்கள் ஆதாரங்களை கொடுக்க உள்ளோம்.

இதுபோன்ற இந்தியா உங்களுக்கு ஆபத்தானது என்று மக்களிடம் எடுத்துச் சொல்லுகிறோம். இந்த இந்தியா அம்பானி, அதானி, மோடி, அஜித் தோவல் வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம். ஆனால், இது உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் ஆபத்தானது. இவ்வாறு அவர் கூறினார்.

கேரள சட்டபையில் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.