📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 10, 2026 07:30 AM

இனி தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்.. இன்று முதல்வர் விஜய் தனித் தீர்மானம்!

இனி தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்.. இன்று முதல்வர் விஜய் தனித் தீர்மானம்!

இனி தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்.. இன்று முதல்வர் விஜய் தனித் தீர்மானம்!

ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டதையடுத்து எழுந்த அரசியல் சர்ச்சை மத்தியில், தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக முதன்மை இடத்தில் கொண்டு வர முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் முன்வைக்கிறார். இது தமிழ் மொழி, தமிழர் அடையாளம், பண்பாட்டு மரபுகளுக்கு அரசின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முக்கிய அரசியல் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் கட்டாயம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடு என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடப்படுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய சூழலில், நாளை சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.