இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?
இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?
இன்று (ஆகஸ்ட் 31), உங்கள் ராசிக்கு பணவரவு காத்திருக்கிறதா? எதிர்பாராத மாற்றங்கள் என்ன? முழு ராசிபலனை தெரிந்துகொள்ளுங்கள்.
இன்று சில எதிர்பாராத செலவுகள் வந்தாலும், அதற்கேற்ற நிதி வசதி இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் - மனைவி இடையே புரிதலும் அன்பும் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் சந்தோஷமான அனுபவங்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய திட்டங்களை தொடங்க சாதகமான நாள்.
மனதில் புதிய நம்பிக்கையும் உற்சாகமும் பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். செலவுகள் அதிகரிப்பதால் பணத்தை திட்டமிட்டு பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரித்து லாபம் மேம்படும்.
இன்று திடீர் பணவரவு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. விரும்பிய பொருட்களை வாங்கும் சந்தர்ப்பம் அமையும். சகோதரர்கள் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உருவாகும்.
மனதில் உற்சாகமும் நம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைக்கலாம். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு அமையும். குடும்ப உறவுகளில் ஆதரவு கிடைக்கும். பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.
நினைத்த காரியங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். சில தாமதங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். ஆன்மிக செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களின் சில தகவல்கள் மனதில் சங்கடத்தை ஏற்படுத்தலாம். வியாபாரத்தில் வருமானம் சீராக இருக்கும்.
குடும்பம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். நண்பர்கள் மூலம் நடைபெற வேண்டிய சில காரியங்களில் தாமதம் ஏற்படலாம். மனதில் தோன்றும் குழப்பங்களை தவிர்த்து தெளிவுடன் செயல்படவும். வியாபாரத்தில் வழக்கமான நிலை தொடரும்.
இன்று மகிழ்ச்சியான அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அதே நேரத்தில் சில திடீர் செலவுகளும் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
விருச்சிகம்:
இறைவனின் அருள் துணையாக இருக்கும் நாள். சில தடைகள் இருந்தாலும் முயற்சியால் காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பாராத வருமான வாய்ப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். குழந்தைகளிடம் பொறுமையாக அணுகுவது நல்லது. தொழிலில் இருந்த சிக்கல்கள் குறையும்.
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். இருப்பினும் திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அக்கம் பக்கத்தினருடன் நல்ல உறவை பேணவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் சூழல் உள்ளது.
இன்று எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப உறவுகள் தொடர்பான சில விஷயங்களில் கவனம் தேவை. தாயின் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும். நண்பர்கள் மூலம் உற்சாகமான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் உதவியுடன் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் சீராக நடைபெறும்.
தந்தை வழி உறவுகள் மூலம் உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் தொடர்பாக செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் அல்லது ஆலய தரிசனம் மேற்கொள்ளலாம். நண்பர்களால் நன்மை கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் விஷயத்தில் கவனம் தேவை.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அதே நேரத்தில் சில தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உறவினர்கள் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கணவன் - மனைவி இடையே அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சுமாரான நிலை காணப்படும்.