📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 31, 2026 11:03 AM

இன்று நள்ளிரவு வரை மட்டுமே வாய்ப்பு: ITR தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

இன்று நள்ளிரவு வரை மட்டுமே வாய்ப்பு: ITR தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

இன்று நள்ளிரவு வரை மட்டுமே வாய்ப்பு: ITR தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

கணக்குத் தணிக்கை செய்ய தேவையில்லாத வணிகர்கள், தனியுரிமையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான 2026-27 நிதியாண்டின் வருமான வரித் தாக்கல் (ITR) செய்ய இன்று (ஆகஸ்ட் 31) கடைசி நாளாகும். இன்று இரவு 11:59 மணிக்குள் வருமான வரி தாக்கலை சமர்ப்பித்து சரிபார்க்கத் தவறினால், தாமத கட்டணம் மற்றும் வட்டியுடன் கூடிய பிந்தைய வருமான வரித் தாக்கலை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். வணிகங்ககளின் மொத்த விற்றுமுதல் ரூ.1 கோடியைத் தாண்டும் போது தணிக்கை அவசியம். (ரொக்கப் பரிவர்த்தனை 5%-க்கும் குறைவாக இருந்தால் இந்த வரம்பு ரூ.10 கோடி). தொழில்முறையாளர்களின் மொத்தப் ரசீதுகள் ரூ.50 லட்சத்தை தாண்டும் போது தணிக்கை கட்டாயமாகும்.

கணக்குத் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லாத சிறு வணிகர்கள், சுயதொழில் வல்லுநர்கள், மற்றும் 'Presumptive Taxation' முறையைப் பின்பற்றி ITR-3 மற்றும் ITR-4 (சுகம்) படிவங்களைத் தாக்கல் செய்வோருக்கு இன்றே கடைசி நாள்.

சாதாரணச் சம்பளக் காரர்களுக்கான கெடு கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. எனினும், அவர்கள் தாமதக் கட்டணத்துடன் தற்போது தாக்கல் செய்யலாம்.

கணக்குத் தணிக்கைக்கு உட்பட்ட வணிகர்களுக்கு அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது.

ஆகஸ்ட் 31-க்கு பிறகு தாக்கல் செய்யப்படும் ஐடிஆர்-கள் 'Belated Return' ஆகக் கருதப்பட்டு, வருமான வரம்பிற்கு ஏற்ப ரூ.5,000 வரை தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும்.

செலுத்த வேண்டிய வரிப் பாக்கி இருந்தால், அதற்கு தனியாக வட்டி விதிக்கப்படும்.

காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் ரிட்டர்ன்களில் வணிக இழப்புகளை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு கொண்டு செல்ல முடியாது.

வரி செலுத்துவோர் கடைசி நேர இணையதள நெரிசலைத் தவிர்க்க உடனடியாக வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ மின்-தாக்கல் போர்டல் மூலம் தங்களது ரிட்டர்ன்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.