📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 12, 2026 07:30 AM

இன்று தியேட்டரில் ரிலீஸாகும்.. தமிழ், மலையாள படங்கள்.. என்னென்ன பார்க்கலாம்?

இன்று தியேட்டரில் ரிலீஸாகும்.. தமிழ், மலையாள படங்கள்.. என்னென்ன பார்க்கலாம்?

இன்று தியேட்டரில் ரிலீஸாகவுள்ள தமிழ் மற்றும் மலையாள படங்கள் என்னென்ன? இந்த வீக் எண்டு குடும்பத்துடன் என்னென்ன படம் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தெலுங்கில் உருவாகியுள்ள காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Epic - First Semester'. பெற்றோர்களின் ஆசியை நிறைவேற்ற வெளிநாட்டில் படிக்கும் மிடில் கிளாஸ் இளைஞனின் காதல் கதையே இப்படத்தின் கதை. இப்படம் இன்று தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.

ஜோஜு ஜோர்ஜ், ஊர்வசி, பாக்கியலட்சுமி, அஜயன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Aasha'. இப்படம் இன்று செப் 11ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.

பார்வதி திருவோத்து, மாத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள போலீஸ் திரில்லர் திரைப்படம் 'Pradhama Drishtiya Kuttakkar'. இப்படம் இன்று செப் 11ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.

கார்த்தி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் 'சர்தார் 2'. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று தியேட்டரில் ரிலீசானது. மக்களே குடும்பத்துடன் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.

சூரி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவான திரைப்படம் 'மண்டாடி'. இப்படம் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புடன் நேற்று தியேட்டரில் ரிலீசானது. இந்த வீக் எண்டு குடும்பத்துடன் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.