📅 Tuesday, 28 July 2026 IST | ஆடி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 28, 2026 02:31 PM

இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்​கள் எண்ணிக்கையில் ராகுல் காந்தியை முந்திய விஜய்!

இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்​கள் எண்ணிக்கையில் ராகுல் காந்தியை முந்திய விஜய்!

புதுடெல்லி: இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் எண்​ணிக்​கை​யில் மக்களவை எதிர்க்​கட்சித் தலை​வர் ராகுலை பின்​னுக்​குத்​தள்ளி தமிழக முதல்​வர் ஜோசப் விஜய் முன்​னிலை பெற்​றுள்​ளார்.

நீட் தேர்வு வினாத்​தாள் கசிவுக்கு எதிரான சமீபத்​திய போராட்டங்களின்போது இன்​ஸ்​டாகி​ராம் ரீல்​ஸ்​களும் வீடியோக்களும் லட்​சக்​கணக்​கில் வைரலானது.

இதன்மூலம் இளைஞர்​களைச் சென்​றடைய டிஜிட்​டல் ஊடகங்​களே மிகச் சிறந்த வழி என்​பது மீண்​டும் உறுதி ஆகி உள்​ளது. இதனால் ஆளும் கட்​சி, எதிர்​க்கட்​சிகள் என்ற வேறு​பாடின்றி அனைத்​துக் கட்​சித் தலை​வர்​களும் சமூக வலை​தளங்​களில் தீவிர​மாக இயங்கத் தொடங்​கி​யுள்​ளனர். இன்ஸ்டாகிராம் வாயிலாக இளைஞர்களைச் சென்றடைய வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இன்​ஸ்​டாகி​ராம் தளத்​தைப் பொறுத்​தவரை, 10.2 கோடி பின்​தொடர்பவர்​களைக் கொண்டு உலகள​வில் பிரதமர் நரேந்​திர மோடி முன்னிலையில் உள்​ளார். அவருக்கு அடுத்​த​படி​யாக மத்திய அமைச்​சர்​கள் வரிசை​யில், அமித் ஷா (3.22 கோடி), நிதின் கட்​கரி (66 லட்​சம்) உள்​ளிட்​டோர் உள்​ளனர்.

எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் வரிசை​யில் காங்​கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்​தி​யைப் பின்​னுக்​குத் தள்ளி (1.47 கோடி), தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 1.87 கோடி ஃபாலோயர்​களு​டன் முதலிடத்​தைப் பிடித்​துள்​ளார். இவர்​களை​யடுத்​து, அசாதுதீன் ஒவைசி (1.25 கோடி), கேஜ்ரி​வால் (40 லட்​சம்), பிரி​யங்கா (40 லட்சம்), மு.க. ஸ்டா​லின் (23 லட்​சம்​) உள்​ளிட்​டோர்​ உள்ளனர்.