📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 05, 2026 09:03 PM

இன்ஸ்டாகிராம் பிரபலம் மதுமிதா மீது நகை திருட்டு வழக்குப்பதிவு

இன்ஸ்டாகிராம் பிரபலம் மதுமிதா மீது நகை திருட்டு வழக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் வினோத்குமார், தொழில் அதிபர். இவருடைய மனைவி மதுமிதா. பிரபல யூடியூபரான இவர் இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து சமூகவலைதளங்களிலும் கணக்கு வைத்திருக்கிறார். அதில் வித விதமான ஆடைகள், நகைகள் அணிந்தும், கட்டுக்கட்டாக பணத்துடன் இருப்பது போன்றும், பணமழையில் நனைவது போன்றும் வீடியோக்களை 'ரீல்ஸாக வெளியிட்டு பிரபலமானார்.

இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் மதுமிதா குடும்பத்தினர் வீடு வாங்கி குடியேறினர். கடந்த 24-ந் தேதி மாலையில் மதுமிதா கணவருடன் வெளியே சென்ற நேரத்தில் அவருடைய வீட்டில் 118 பவுன் நகைகள் கொள்ளை போனது. இந்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த புகாரின் பேரில் ராஜாக்க மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க மதுமிதா, மீண்டும் ரீல்ஸ் வீடியோக்களை சமூகவலைதளத்தில் உற்சாகமாக வெளியிட்டார். இதனால் அவர் மேலும் பிரபலமானார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலம் மதுமிதா மீது 5 பவுன் நகையை திருடியதாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து அளித்த புகாரில், பிசியோதெரபி சிகிச்சையின்போது மதுமிதா அறிமுகமானதாகவும், கடந்த 2022-ல் நெல்லை நீதிமன்றம் அருகே தனது வாகனத்தில் அவர் ஏறியதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் மதுமிதாவை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வீட்டுக்குச் சென்றபோது, கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயின் காணாமல் போனதாக கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் மதுமிதா மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நெல்லையில் நடந்ததாக கூறப்படுவதால், மேல் நடவடிக்கைக்காக வழக்கை நெல்லை மாவட்டத்திற்கு மாற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.