📅 Tuesday, 04 August 2026 IST | ஆடி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 04, 2026 01:05 AM

இந்த ஆண்டு 1000 கோடி வசூலுக்கு அடிபோடும் சூர்யா.. விஜய், ரஜினியை ஓவர்டேக் செய்ய செம சான்ஸ்!

இந்த ஆண்டு 1000 கோடி வசூலுக்கு அடிபோடும் சூர்யா.. விஜய், ரஜினியை ஓவர்டேக் செய்ய செம சான்ஸ்!

சென்னை: 4 வருட இடைவேளைக்குப் பிறகு பாலிவுட்டில் மீண்டும் ஷாருக்கான் நடிக்க ஆரம்பித்த நிலையில், பதான், ஜவான், டன்கி என ஒரே ஆண்டில் 2500 கோடி வசூலை பாலிவுட்டுக்கு வசூல் செய்து மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் லியோ படங்களின் மூலம் ஒரே ஆண்டில் 1000 கோடிக்கு அதிகமான வசூலை ஈட்டிக் கொடுத்தனர். இந்நிலையில், ரஜினிகாந்த் மற்றும் விஜய் இணைந்து செய்த சாதனையை இந்த ஆண்டு சூர்யா 'தி ஒன்'னாக தானே செய்து முடிக்கும் முயற்சியில் பக்காவாக இறங்கியுள்ளாராம்.

ஏற்கனவே கருப்பு படத்தின் மூலம் 340 கோடி ரூபாய் வசூலை பாக்ஸ் ஆபீஸில் ஈட்டிக் கொடுத்த சூர்யா அடுத்து ரிலீஸ் ஆக காத்திருக்கும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் படம் என ஒரே ஆண்டில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.

விஜய் இடத்தை நிரப்பும் சூர்யா: விஜய் அரசியலுக்குச் சென்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகவே மாறியுள்ளார். இதற்கு பிறகு சினிமாவில் அவர் நடிக்கப் போவதில்லை என அறிவித்து விட்டார். அஜித் குமார் ரேஸிங்கில் பிசியாக இருக்கும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா பாக்ஸ் ஆபீஸ் கிங்காக மாற பக்காவாக வேலை பார்த்து வருகிறார் என்கின்றனர். கருப்பு படத்தின் மூலம் மதுரை ரசிகர்களை கவர்ந்த சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துக்காக கோவையில் நேற்று இசை வெளியீட்டு விழாவை நடத்தி ஏகப்பட்ட ரசிகர்களையும் பொதுமக்களையும் கவர்ந்துள்ளார்.

ஒரே ஆண்டில் 1000 கோடி வசூல்: பாக்ஸ் ஆபீஸில் 2026ம் ஆண்டு விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் 300 கோடி ஈட்டியுள்ளது. ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அது மிஸ் ஆனாலும் இந்த ஆண்டு தன்னுடைய படங்கள் மூலமாக 1000 கோடி வசூலை சாதித்துக் காட்ட அனைத்து வேலைகளையும் சூர்யா பார்த்து வருகிறார் என்கின்றனர். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அந்த படமும் 300 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டினால், தீபாவளிக்கு ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நடித்து வரும் படமும் 300 கோடி பிளஸ் வசூல் செய்தால் ஒரே ஆண்டில் 1000 கோடி வசூலை சூர்யா தமிழ் சினிமாவுக்கு அள்ளிக் கொடுப்பார் என்கின்றனர்.

சீனு: சரவெடி என்கிற தலைப்பு வைக்கப்பட்ட தகவல்கள் வெளியான நிலையில், லேட்டஸ்ட்டாக சூர்யா - நஸ்ரியா படத்துக்கு ஜித்து மாதவன் சீனு எனும் டைட்டிலை பரிசீலனை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் அந்த படத்தின் அறிவிப்பையும் புரமோஷனையும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸுக்குப் பிறகு சூர்யா ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவுக்கு தற்போது சூர்யா போல வேகமாக பல நூறு கோடி வசூலை அள்ளிக் கொடுக்கும் நடிகர்கள் தேவை என்கின்றனர். அவரும் தி ஒன்னாக மாறி கோலிவுட் சிம்மாசனத்தை பிடிப்பார் என்கின்றனர்.