📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 07, 2026 08:04 AM

இந்த செப்டம்பர் மாதத்தில் நடைப்பெறும் 'Odoo Experience 2026' நிகழ்வில் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த செப்டம்பர் மாதத்தில் நடைப்பெறும் 'Odoo Experience 2026' நிகழ்வில் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

குஜராத், காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் கன்வென்ஷன் சென்டரில், வரும் செப்டம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் 'Odoo Experience India 2026' நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது. திறந்த மூல வணிக மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமான 'Odoo' இதனை ஏற்பாடு செய்துள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் வணிக நிகழ்வுகளில் ஒன்றாகும்.Odoo வின் மென்பொருளானது கணக்கில், இன்வெண்டரி எனும் சரக்கு மேலாண்மை, விற்பனை துறை மற்றும் மனித வளம், போன்ற அன்றாட வணிகப் பணிகளை ஒரே அமைப்பின் கீழ் நிர்வகிக்க உதவுகிறது.இந்தியாவில் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் இன்னும் தங்களுடைய அன்றாட வணிக பணிகளை செய்வதற்கு spreadsheets, செய்திப் பரிமாற்ற செயலிகள் மற்றும் தனித்தனி கருவிகளையே நம்பியுள்ளன. வணிக நிறுவனங்கள் தங்களுடைய செயல்பாடுகளை எளிமையான மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்ள உதவும் செயலிகளை எடுத்துக்காட்டுவதே இத்தகைய நிகழ்வுகளின் நோக்கமாகும்.இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 25,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட உரைகளும், 180க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களின் பங்கேற்பும் இடம்பெற உள்ளன. அதுமட்டுமல்லாமல் Odoo தனது புதிய மென்பொருள் பதிப்பான 'Odoo 20'-ஐ இந்த மேடையில் அறிமுகப்படுத்த உள்ளது.இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் செய்தி உள்ளடக்கத்தை உருவாக்கக்கூடியவர்களை (content creators) இந்நிகழ்வு ஒன்றிணைக்கிறது. இதில் பங்கேற்கும் சில முக்கியப் பிரபலங்கள் பின்வருமாறு:நடிகரும் தொழில்முனைவோருமான சுனில் ஷெட்டி;தைரோகேர் (Thyrocare) நிறுவனரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானியுமான டாக்டர் ஆரோக்கியசாமி வேலுமணி;V3 வென்ச்சர்ஸின் இணை நிறுவனரும் டாக்டர் வைத்யாஸ் (Dr. Vaidya's) நிறுவனருமான அர்ஜுன் வைத்யா;உள்ளடக்க உருவாக்குநரும் பீஸ்ட்லைஃப் (Beastlife) நிறுவனத்தின் இணை நிறுவனருமான கௌரவ் தனேஜா;மமாஎர்த் (Mamaearth) இணை நிறுவனர் கசல் அலக்;வீபா ஃபுட்ஸ் (Veeba Foods) நிறுவனர் விராஜ் பால்;ஸ்விகி (Swiggy) நிறுவனத்தின் வடிவமைப்புத் துறைத் தலைவர் சப்தரிஷி பிரகாஷ் மற்றும் பலர்.ஒரு பேச்சாளர்களும் தங்களுடைய சொந்தத் துறை தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். இதன் மூலம் அவர்களுடைய வணிக செயல்பாடுகள் முதல் சந்தைப்படுத்துதல் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு வரை பல்வேறு கண்ணோட்டங்களை ஒரே இடத்தில் பார்வையாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.'Odoo Experience India 2026' நிகழ்வில் பல்வேறு உரைகளும், பலதரப்பட்ட தலைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும். இதில் கணக்கியல், சரக்கு மேலாண்மை, உற்பத்தி, உணவகங்கள் மற்றும் ஹோட்டல் செயல்பாடுகள், மின்னணு வர்த்தகம் மற்றும் அன்றாட வணிக கருவிகளில் சேர்க்கை நுண்ணறிவுகளின் பயன்பாடு உள்ளிட்டவை அடங்கியதாக இருக்கும். இந்த அமர்வானது சிறிய கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை எந்த ஒரு நிலையில் இருக்கக்கூடிய வணிக உரிமையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.கண்காட்சி பகுதியில் 180 க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா முழுவதும் உள்ள Odoo-வின் கூட்டாளர்களாக இருப்பார்கள். இங்கு வணிகர்கள் Odoo மென்பொருள் தொகுப்புகளை சரியாக பயன்படுத்துவது மற்றும் நிறுவ இந்த கூட்டாளர்கள் உதவுகிறார்கள்.ஒரு பார்வையாளர் அல்லது வணிகம் செய்யக்கூடியவர் ஒரு குறிப்பிடத்தக்க வணிக சிக்கல் குறித்த விஷயங்களை இங்கு கேட்ட பின்னர் அதை தீர்க்கக் உதவக்கூடிய கூட்டாளரை நேரில் சந்தித்து பேசலாம்.செப்டம்பர் 11 மற்றும் 12ஆம் தேதி நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிக்கு முன், செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் Odoo 10 சிறப்புப் பயிற்சி வகுப்புகளையும் (master classes) நடத்துகிறது. இதில் Odoo கருவிகள் குறித்து அடிப்படை விஷயங்களைத் தாண்டி, மேலும் ஆழமாக அரிய விரும்பும் நபர்களுக்கு விரிவான மற்றும் நேரடியான பயிற்சியை இந்த அமர்வுகள் வழங்குகின்றன.இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு தேவையான புதிய விஷயங்களை கற்றல், தொழில் முறையை தொடர்புகளை வளர்த்துக் கொள்வது மற்றும் நடைமுறை தேவையான உதவிகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் பெறக்கூடிய விதத்தில் அரிய வாய்ப்பை இந்த நிகழ்வு வழங்குகிறது.'Odoo Experience India 2026' என்பது வெறும் மென்பொருள் மாநாட்டு என்பதைத் தாண்டிய, இந்த நிகழ்வு பல்வேறு பின்னணிகளை கொண்ட நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் படைப்பாளிகள் ஒரே மேடையேப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய உள்ளது. இதில் எந்த ஒரு அளவிலான வணிகம் செய்யக் கூடியவர்களுக்கு தேவையான நவீன மற்றும் மலிவு விலையில் டிஜிட்டல் கருவிகள் தங்களுக்கு உதவும் என்பதே அறிந்து கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க Odoo-வின் அதிகாரப்பூர்வ நிகழ்வுப் பக்கத்தில் பதிவு செய்தல் தற்போது தொடங்கியுள்ளது. 'Basic pass' மூலம் அனுமதி இலவசம். இந்தப் பாஸ் (pass) அனைத்து உரைகள், கண்காட்சிப் பகுதி மற்றும் பயிலரங்குகளில் (workshops) பங்கேற்க வழிவகுக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் Odoo-வின் அதிகாரப்பூர்வ நிகழ்வுப் பக்கத்தில் event page பதிவு செய்துகொள்ளலாம்.